பரிபூரணம் 57-0419 1 …மேலும் உங்களுடன் சேர்ந்து ஆராதிக்க இங்கு இருக்க வேண்டும். இப்பொழுது செய்திக்கு முன்னர், என்னுடைய நல்ல நண்பர் வேத பண்டிதர் லீ வேயில், இங்கே மேடையில் இருக்கிறார், அவர் லைமா ஓஹையோவிலுள்ள முதல் பாப்டிஸ்டு சபையை சேர்ந்தவர், அவர் லைமா கூட்டத்தில் என்னுடைய ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார். அவர் இன்றிரவு இங்கு வரும்போது, லைமா கூட்டத்தைக் குறித்து சபையோரிடம் சில வார்த்தைகளை கூறமாட்டீரா என்று நான் கேட்டேன், எனவே இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் பேசுவார். இப்பொழுது வேத பண்டிதர் லீ வேயில் அவர்களை, இன்றிரவு உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அவர் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்ட மற்றொரு பாப்டிஸ்டு ஆவார். 2 [சகோதரன் லீ வேயில் அனேக ஜனங்கள் சுகமடைந்ததைக் குறித்து பதினான்கு நிமிடங்கள் சாட்சி பகர்கிறார்.—ஆசி.] ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரன் வேயில், உங்களையும் கூட. 3 ஒரு பாப்டிஸ்ட் போதகருக்கு அது மிகவும் வலிமையானதாயிருந்தது, அது அவ்வாறிருந்ததல்லவா? பாருங்கள், சகோதரன் வேயில் நம்முடன் இருப்பதற்காக நாம் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறோம். அவரால் முடிந்த எந்த நேரத்திலும் திரும்பவும் வந்து நம்மை சந்திப்பதற்காக நிச்சயமாகவே கதவுகள் திறந்தேயிருக்கும். இப்பொழுது இன்றிரவு… நாளை இரவு—கர்த்தராகிய இயேசுவை கல்லறையிலிடுதலாயுள்ளது. 4 ஞாயிற்று கிழமை காலையிலே ஆறு மணிக்கு சூரியோதய ஆராதனை உள்ளது. மேலும் ஆராதனையின் கூடுதலான பாகத்தை சகோதரன் அறிவித்துள்ளார் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது நாம் சற்று நேரம் ஜெபிப்போமாக. 5 ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தாவே, உம்முடைய வார்த்தையே சத்தியமாய் இருக்கிறது, இந்த வார்த்தையை கையாண்டு, பயமின்றி, அதை ஜனங்களுக்கு அளிக்கிற மனிதருக்காக நாங்கள் நன்றியுள்ள வர்களாயிருக்கிறோம். இன்றிரவு நாங்கள் இந்த வேதாகமத்தை திறக்கையில் அல்லது அதனுடைய பக்கங்களைத் திருப்புகையில், ஸ்தோத்தரிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் வந்து வார்த்தையின் புரிந்துகொள்ளுதலை எங்களுக்கு திறந்தருள்வாராக. இயேசு கிறிஸ்துவின் மூலமாக, நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். 6 இது நம்முடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தரின் சிலுவையேற்றத்தை நாம் நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் மகத்தான இரவாகும், நான் அவருடைய சொந்த விலையேறப்பெற்ற உதடுகளிலிருந்து உரைக்கப்பட்டு, அவருடைய புஸ்தகத்திலே அவர் எழுதியுள்ள வார்த்தைகளை இன்றிரவு வாசிக்க விரும்புகிறேன். பரிசுத்த மத்தேயு, 4-ம் அதிகாரத்தில், நாம்…47 மற்றும் 48-ம் வசனங்களை, நாம் இதை வாசிப்போம்: உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா? ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். 7 இன்றிரவு நாம் பரிபூரணம் என்ற பொருளின் பேரில் பேசப் போவதாக நாம் கூறியிருந்தோம். இப்பொழுது நாம்…அது நம்முடைய கர்த்தரின் சிலுவையேற்ற இரவிற்கான மிக வினோதமான ஒரு பாடப் பொருளைப் போன்று தென்படுகிறது. ஆனால் இன்றைக்கு, ஒருவேளை, நீங்கள் வானொலியிலே, இந்த உலகத்தின் பாவங்களுக்காக நம்முடைய கர்த்தர் மரித்த இந்த பயங்கரமான நாளைக் குறித்து அனேக செய்தியாளர்கள் வித்தியாசமான பிரசங்கங்களை எப்படி அளித்தனர் என்பதை நீங்கள் கேட்டுக்கொண்டிருந்திருக்கலாம். எனவே நான் இதைப் புரியவைக்க, ஒரு வித்தியாசமான வழியையே இன்றிரவு தெரிந்துள்ளேன். இது சற்று வித்தியாசமானதாயும் மற்றும் உங்களுக்குக் கொஞ்சம் புத்துணர்வூட்டுகிறதாயும் இருக்கும். மேலும் நாம் இதை விளக்கிக் கூற முயற்சிக்கும்போது, ஸ்தோத்திக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் தாமே இப்பொழுது வார்த்தையை ஊக்குவிப்பாராக. 8 தேவன் பரிபூரணத்தைக் கேட்கிறார். ஆகவே குறைவுள்ளது எதுவுமே தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாகச் செல்ல முடியாது என்பதை நாம் சிந்தையில் கொண்டிருக்க வேண்டும். நம்முடைய ஆராதனையும், ஒவ்வொரு காரியமும், அது பரிபூரணமாய் இருக்க வேண்டும். 9 இப்பொழுது, ஏதேன் தோட்டத்தில், தேவன் ஆதாமையும் ஏவாளையும் வைத்திருந்தார். அவர்கள் பாவத்தினாலே, கீழ்படியாமையினாலே, தேவனுடைய நியாயப்பிரமாணங்களை மீறி பாவஞ்செய்தனர். ஆகையால் மீறுதல் உண்டானபோது, நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே கீழ்படியாமையாயிருக்கிறது. தேவனுடைய பிரமாணம், அவர் பரிசுத்தராயிருக்கிறபடியால், அதுவும் கலப்படமற்ற பரிசுத்த மாயுள்ளது, ஆகையால் ஒரு துளி அசுத்தம் கூட அவருடைய பிரசன்னத்தில் நிற்கமுடியாது என்பது தேவனுடைய நியாயப் பிரமாணமாயிருக்கிறது. எனவே, மீறுதலினாலே பாவமானது இவ்வுலகத்திற்குள் வந்திருக்குமானால், பாவியானவன் தேவனுடைய சமூகத்திற்குள் மறுபடியும் வந்து நிற்பதற்கு முன் பாவமானது முதலாவது தீர்க்கப்பட வேண்டும். 10 இப்பொழுது, நியாயப்பிரமாணம் இல்லையென்றால், அப்பொழுது நீதி என்ற ஒன்று இருக்காது. ஆனால் நியாயப்பிரமாணம் தேவைப்பட்டது, அல்லது நீதிக்கு ஒரு நியாயப்பிரமாணம் தேவையாயிருக்கிறது. நியாயப்பிரமாணம், அது—அது அழைக்கப்படும்போது, அது நீதியை செயல்படுத்துகிறது. 11 இப்பொழுது, நியாயப்பிரமாணத்தினாலே, ஒருவரும் இரட்சிக்கப்படுவதில்லை. இப்பொழுது, நியாயப்பிரமாணமானது நம்மை இரட்சிக்க முடியாது. நியாயப்பிரமாணமானது நம்மை சிறைக்குள் வைக்கிற காரியமாக மாத்திரமே இருக்கின்றதேயன்றி, நம்மை மீட்கக் கூடிய வல்லமை அதற்கு இல்லை. நாம் பாவிகளாயிருந்தோம் என்றும், அது நம்மை ஆக்கினைக்குட்படுத்தியது என்பதை மாத்திரமே நியாயப்பிரமாணம் நமக்கு காண்பித்தது. அதைத்தான் நியாயப்பிரமாணம் செய்ய வேண்டியதாயுள்ளது. அது தீர்ப்பைக் கொண்டு வருகிறதாய், அல்லது உங்களுடைய தவறு எங்கே என்பதை உங்களுக்கு காண்பிக்கிறதாயுள்ளது. ஆகையால் நியாயப்பிரமாணம்தானே இரட்சிக்க முடியாது. அதனால் குற்றப்படுத்த மாத்திரமே முடியும். 12 தேவன், பரிசுத்தராயும் நீதிபரராயும் இருக்கிறதினாலே, அவர் ஒரு வழக்கினை உடையவராயிருக்க வேண்டியிருந்தது. அவர் பாவியை குற்றம் சாட்ட வேண்டியதாயிருந்தது, ஏனெனில் அவன் கிருபையின் எல்லைகளைத் தாண்டிவிட்டான், சட்டத்தை மீறுகிற ஒரு பிரஜையாக மாறினான். அப்படியென்றால், அவன் நியாயந்தீர்க்கப்பட வேண்டும். 13 ஒவ்வொரு சட்டமும் ஒரு தண்டனையைக் கொண்டதாக இருக்கிறது, ஏனென்றால், தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறுகிறவனுக்கு மரணமே தண்டனையாயிருக்கிறது. ஆகையால் அது மானிட வர்க்கத்திற்கு மரணத்தைக் கொண்டு வர வேண்டியதாயிருந்தது. மானிட வர்க்கம் முழுவதுமே இந்த நியாயப்பிரமாணத்தின் தண்டனையின் கீழிருந்தன. 14 இப்பொழுது, ஆதாமும் ஏவாளும் பாவம் செய்திருந்தபோது, அவர்களுக்கு வழியேயில்லாதிருந்தது, இந்தப் பாவம் தீர்த்து வைக்கப்படுவதைத் தவிர, அவர்கள் மறுபடியும் தேவனுடைய சமூகத்தில் வந்து நிற்க வேறெந்த தீர்வும் இல்லாதிருந்தது. எந்தவிதமான ஒரு பாவத்தை ஒரு மனிதன் செய்திருந்தாலும் பரவாயில்லை, அது எவ்வளவு சிறியதாயிருந்தாலும் அல்லது எவ்வளவு பெரியதாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, பாவம் செய்த ஒருவர் பரிசுத்த தேவனுடைய பிரசன்னத்தில் நிற்பதற்கு முன்னர் அந்த தனிப்பட்ட பாவமானது நிவர்த்தியாக்கப்பட வேண்டும். 15 ஆகையால், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து நியாயப்பிரமாணத்தை மீறினபோது, அவர்கள் மரணத்திற்குட்பட்டவர்களாயிருந்தனர். அங்கே நியாயப்பிரமாணமானது நிறைவேற்றப்பட வேண்டியதாக இருந்தது, ஆகையால் அது மானிட வர்க்கம் முழுவதையும் மரண தண்டனைக்குள்ளாக்கவிட்டது. இப்பொழுது நாம் மாத்திரம் ஒரு சில நிமிடங்கள் இப்பொழுது, நம்முடைய சிந்தையில், இந்த மகத்தான காட்சியை நோக்கிப் பார்த்துப் பதித்துக் கொள்ள முடிந்தால், அப்பொழுது இங்குள்ள ஒவ்வொரு நபரும் இந்த நிலைக்குள்ளாகவே இருக்கிறதை நினைவில் கொள்வோம். ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும், குழந்தையும், மானிட வர்க்கத்தின் தலைவனாகிய ஆதாமின் மீறுதலினாலே, ஒவ்வொருவரும் மரணதண்டனைக்குட்பட்டவர்களாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள், ஆதாம்; அவனுடைய மீறுதலினாலே, நாம் ஒவ்வொருவரும் பாவத்திற்கு பலியானோம். 16 பாவமானது தீர்த்து வைக்கப்பட வேண்டும். ஆகையால், தேவன், தம்முடைய மகத்தான எல்லையற்ற மற்றும் தம்முடைய மகத்தான அன்பில்…நியாயப்பிரமாணம் ஒரு பாவியை அவனுடைய சிருஷ்டிகரிடமிருந்து பிரிப்பதாயிருந்தது; அதன்பின் அவன் நிர்மூலமாக்கப்பட்டு, முற்றிலும் நிர்மூலமாக்கப்படுகிறான், அவனுடைய பாவமானது தீர்த்து வைக்கப்பட்டாலொழிய அவன் திரும்பி வருவதற்கு எந்த வழியுமே இருக்காது. ஒரு பாவி முடிவிலே முற்றிலும் நிர்மூலமாக்கப்படுதலை நம்புவது மிகவும் சுலபமான காரியமாயிருக்கும், ஏனெனில் அவன் முழுவதுமாய், தேவனுடைய பிரசன்னத்திலிருந்து என்றென்றுமாய் பிரிக்கப்பட்டுவிடுகிறான். 17 இப்பொழுது இந்த பாவத்தைக் கவனியுங்கள். தேவன் நீதிபரராயிருக்கிறதினாலே, அவர் நீதியை செய்வதை தவிர வேறொன்றையும் செய்ய முடியாது, ஏனென்றால் அவரே எல்லா நீதிக்கும் ஆதாரமாயிருக்கிறார், ஆகையால் அவரால் இந்த மீறுதலுக்காக தண்டனையை அளிப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாததாய் இருந்தது. மேலும் அந்த தண்டனை மரணமாயிருந்தது, ஏனென்றால் அவர், “அதை புசிக்கும் நாளிலே நீ சாகவே சாவாய்” என்று கூறினார். இப்பொழுது, இது ஒரு இருண்ட காட்சியாய் இங்கே நமக்கு உள்ளது. 18 ஆனால் அதன்பிறகு நாம் சற்று பின்னோக்கிச் சென்று பார்ப்போமானால், தேவனுடைய தன்மைகளைக் கண்டறியலாம், “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று வேதம் தெளிவாக நமக்குக் கூறுகிறது. ஆனால் அதேசமயத்தில், அவர் அன்பாக இருக்கிறபடியால், அவர் நீதியாயிருக்க வேண்டியுள்ளது. ஆகையால், நாம் மிகவும் பிரியப்பட்டு விளையாடுகிற ஒரு காரியத்தை அன்பு பொருட்படுத்துகிறதில்லை. அன்பு தேவனுடைய நீதியாயிருக்கிறது. 19 இப்பொழுது, தம்முடைய பிள்ளைகள் அவருடைய நியாயப்பிரமாணத்தை மீறியிருந்தார்கள் என்பதையும், அவர்கள் மரணத்துக்கேதுவாய் மரிக்க வேண்டும் என்பதையும் தேவன் கண்டபோது, இராஜாதிபத்திய அன்பானது ஒரு வழியை உண்டுபண்ணும்படி அப்பொழுது அடியெடுத்து வைத்தது. ஏனெனில், இந்த பிள்ளைகள் முற்றிலுமாக, அவருடைய சமூகத்திலிருந்து முற்றிலுமாக பிரிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட வேண்டியவர்களாய் இருந்தார்கள் என்பதை தேவன் கண்டார். அவர்கள் அவருடைய நியாயப்பிரமாணத்தை மீறியிருந்தபடியினால், அவருடைய நியாயப்பிரமாணத்தின் தண்டனை மரணமாயிருந்தபடியால், வேறொன்றுமே செய்யப்பட முடியாததாயிருந்தது. 20 அப்பொழுது தேவனுடைய அன்பானது அவருடைய பிரஜைகளுக்காகப் புறப்பட்டுச் சென்றது. அங்கே தெய்வீக அன்பு வெளிப்பட்டபோது இராஜாதிபத்திய கிருபையானது அன்பின் பொருளை உருவாக்குகிறது. தேவன், தம்முடைய முன்னறிதலினாலே, தம்முடைய வர்க்த்தை அதிகமாய் நேசித்தபோது; அதேசமயத்தில், தண்டனையுடன், அவர் ஏதேன் தோட்டத்தில் மரணத்திற்குப் பதிலாக வேறொன்றின் மரணத்தை ஏற்பாடு செய்தார். அது, அவர் ஒரு குற்றமற்ற சிருஷ்டியை, பாவமறியாத ஒரு சிறு ஆட்டுக்குட்டியை பதிலீடாக்கினதாயிருந்து. அது ஒரு மாற்றீடாக, குற்றமுள்ள பாவிக்கு பதிலாக மரிக்கும்படி கிரியை செய்ய சென்றது. அது அவருடைய பிரஜைகளின் ஜீவனை, அடிக்கப்பட்ட, ஒரு ஆட்டுக்குட்டி காத்ததாயிருந்தது. 21 பழைய ஏற்பாடு முழுவதும் அவர்கள் ஆட்டுக்குட்டிகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், காளைகள் மற்றும் கிடாரிகளின் இரத்தத்தை ஒரு மாற்று மரணத்திற்காக பலியாக செலுத்தினார்கள். ஆனால், தேவனுடைய மகத்தானத் திட்டத்தில் உள்ள யாவுமே, வரபோகிற அந்த அசலானது அவருடைய சிந்தையில் அங்கே முன்னமே இருந்தது, அது இருக்கும்…அவைகள் வரப்போகிற அந்த அசலானவற்றின் நிழல்களாயிருந்தன. வரவேண்டியிருந்த அந்த அசலானது, அவருடைய ஒரே பேறான குமாரனாயிருந்தது. மரித்த ஆட்டுக்குட்டிகள் எல்லாம் ஒரு நிழலாய் மாத்திரமே இருந்தன. ஒரு நிழல் என்பது ஒரு பொருளின் எதிர்மறைப் பக்கமாக இருக்கிறது. அவை வரப்போகிற கல்வாரியை குறித்தே பேசின. 22 இப்பொழுது இதைக் குறித்த ஒரு காட்சிக்காக, நம்முடைய வேதாகமங்களில், எபிரெயரின் புத்தகத்திற்குத் திருப்பி, இங்கே பவுல், அந்த மகத்தான அப்போஸ்தலன், நமக்காக இந்த காரியங்களை வேறுபிரிக்கும்படி என்ன பேசுகிறார் என்பதை எடுத்துக்கொள்வோம். எபிரெயரின் புத்தகம் 10-ம் அதிகாரத்தில், நாம் இதை வாசிக்கிறோம். 23 நான் வார்த்தையை நேசிக்கிறேனே! வார்த்தையே சத்தியமாயிருக்கிறது. நான் அதை என் சபையோருக்கு முன்பாக வாசிக்க விரும்புகிறேன், ஏனென்றால் நான் நியாயத்தீர்ப்பில் அவர்களோடு நிற்பேன் என்பதை நான் அறிந்திருக்கிறேன். நான் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவனாய் இருக்கிறேன். ஆகையால் நான் அதை வார்த்தையிலிருந்து கொண்டு வருவேனானால், அப்பொழுது நான் குற்றவாளியாக இருக்கமாட்டேன்; ஏனென்றால் அது வார்த்தையாயிருக்கிறது, தேவன் தம்முடைய வார்த்தைக்கு பொறுப்பாளியாக இருக்கிறார். 24 இன்றைக்கு சுவிசேஷகர்களும் மற்றவர்களும் தங்களுக்கு தனித்தன்மையை சுற்றிலும் உருவாக்கிக்கொள்வதை நாம் மிக அதிகமாகக் காண்கிறோம். ஓ, அது ஒரு மிகவும் அவமானகரமான காரியமாயுள்ளதே! நாம் சபைகளுக்குள் செல்லும்போது, நாம் கண்டறிகிறோம், நாம் சபைக்குள் செல்லும்போது, நீங்கள் ஒரு குறிப்பிட்ட போதகர், அவர் தன்னைக் குறித்த சற்று விசித்திரமான செய்கையை, சிறிது உணர்ச்சிவசப்படுதலை உடையவராயிருப்பதைக் காண்கிறீர்கள். நீங்கள் கவனிக்கவில்லையெனில், முழு சபையோரையுமே அந்த ஆவி பிடித்துக்கொள்ளும். அவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுதலை உடையவராயிருந்தால், அல்லது அவருடைய தலையை துலுக்கினால் அல்லது ஏதாவது சிறு வினோதமான காரியத்தை செய்தால், பாருங்கள், அப்போது முழு சபையுமே அந்த காரியத்தை செய்யும். இன்றைக்கு, நம்முடைய நவீன சபைகளில், அங்கே உணர்ச்சிவசப்படுதல்களையும், அதைப்போன்றே சிறு காரியங்களையும் நாம் பெற்றுள்ளோம். அது அப்பேர்ப்பட்ட ஒரு குழப்பத்தைப் பெற்றுள்ளதே! ஆனால், ஓ, என் அன்பார்ந்த சகோதரரே, நாம் வார்த்தையின் மேல் சார்ந்திருக்க வேண்டிய ஒரு நேரம் எப்போதாவது இருந்திருக்குமானால், அது இன்றைக்கே! 25 நீங்கள் பாருங்கள், நான் ஏதோ ஒரு சிறு நிலையற்ற ஒரு காரியத்தைக் குறித்த விசித்திரமான வெளிப்பாட்டினை உடையவனாயிருந்து, ஜனங்களை தவறாக வழி நடத்தினேன் என்று அறிந்து, நியாயத்தீர்ப்பில் நான் நிற்பதை வெறுக்கிறேன். என்னுடைய செய்கையின் பேரிலான என்னுடைய ஆவியை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறதில்லை. ஆனால் சத்தியத்தை தோற்றுவிக்கிற, தேவனுடைய வார்த்தையினாலே தேவனுடைய ஆவியையே அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். 26 ஆகையால் இன்றிரவு இந்த மகத்தான வேளையில், நான் தேவனுடைய நித்திய வார்த்தையிலிருந்து வாசிக்க விரும்புகிறேன். இப்பொழுதும் நியாயப்பிரமாணம் பல வருடங்களாக இருந்து வந்தது என்பதை நாம் தெளிவாக உணருகிறோம், ஆனாலும் நியாயப்பிரமாணத்தினால் பாவத்தை எடுத்துப் போட முடியவில்லை. நான் முன்பு கூறியுள்ளபடி, அது வெறுமனே ஒரு சிறைச்சாலையாக இருந்தது. அது நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதைக் கூறின பெரிய துப்பறிவாயிருந்து, ஆனால் உங்களை விடுவிக்க எந்த தீர்வும் இல்லாததாயிருந்தது. அது உங்களை அடகுக் கடையிலே வைத்தது, ஆனால் உங்களை வெளியே எடுக்க அதனோடு எந்த மீட்பரும் இல்லாததாக இருந்தது. அது உங்களை சிறையிலிட்டு, நீங்கள் ஒரு பாவியாயிருந்தீர்கள் என்பதை மாத்திரமே நீங்கள் அறிந்துகொள்ளும்படி செய்கிறது. ஆனால் இப்பொழுது எபிரேயர் 10-ம் அதிகாரத்தில், நாம் வாசிக்கும் போது கவனியுங்கள். இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால்… 27 நினைவில் கொள்ளுங்கள், அது வரப்போகிற சாயலின் ஒரு நிழலாய் இருந்தது. ஒரு நிழலை உருவாக்குகிற ஒரு சாயல் உள்ளது என்பதை மாத்திரமே ஒரு நிழல் அறிமுகப்படுத்துகிறது. “வரப்போகிற காரியங்களின் ஒரு நிழலாய், பொருளாயிராமல்.” கவனியுங்கள், “காரியங்களின்…” …வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல்,…இடைவிடாமல் செலுத்தப்பட்டு வருகிற ஒரே விதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவரை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது. 28 இப்பொழுது, தேவனுக்கு, ஆதியிலே, பரிபூரணம் தேவைப்பட்டது. இயேசு, அவர் பூமிக்கு வந்தபோது, “பரலோகத்திலிருக்கிற உங்கள் தேவன் பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” என்றார். நியாயப்பிரமாணமானது, வரப்போகிற காரியங்களின் ஒரு நிழலாயிருப்பதினால், ஒருபோதும் ஆராதனை செய்கிறவனை பரிபூரணப்படுத்த முடியவில்லை. உங்களுக்கு அந்தக் காட்சி புரிகிறதா? இப்பொழுது நீங்கள் அதை நிச்சயமாகவே தவறவிடாதபடிக்கு நாம் அதை மீண்டும் பார்க்கலாம். தேவனுக்கு பரிபூரண பரிசுத்தம் தேவைப்படுகிறது. எவருமே பாவத்தின் ஒரு சிறு துணுக்கோடு, அவருடைய சாயலில் நிற்க முடியாது. இயேசுவும் அதையே சாட்சி பகிர்ந்து, “பரலோகத்திலிருக்கிற தேவன் பூரணசற்குணராயிருக்கிறதுபோல, பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள்” என்றார். 29 வேதம், “நியாயப்பிரமாணம் அதனுடைய பலிகளினால், செலுத்த வருகிறவனை ஒருபோதும் பரிபூரணப்படுத்த முடியவில்லை” என்றே கூறியுள்ளது. அப்படியென்றால், நியாயப்பிரமாணத்தினால் எதையுமே பரிபூரணப்படுத்த முடியாது. அது வெறும் சுட்டிக்காட்டுகிறதாக மாத்திரமே இருந்தது. ஆகையால் ஒவ்வொரு வருடமும், செலுத்தப்பட்ட இந்த பலியிகளினாலே, ஆராதனை செய்கிறவனை ஒருபோதும் பரிபூரணப்படுத்த முடியாமற் போனது. ஆகையால் நியாயப்பிரமாணத்தின் கீழ் இருக்கிற எவனும், அல்லது நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்கிறவனும், அல்லது நிழல்களுக்கு கீழாக இருந்தவனும், பரிபூரணமாக முடியவில்லை. அப்படியென்றால் (2வது வசனம்) அந்த பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?… 30 தேவனுடைய பிரசன்னத்திலே என்னை நானே பரிபூரணமாக்கிக் கொள்ள ஏதாவதொன்றை என்னால் செய்யக் கூடுமானால், அப்பொழுது கிறிஸ்து எனக்காக மரித்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் தேவனுடைய சமுகத்திற்கு தகுதி பெறும்படி, உங்களால் ஏதாவதொன்றை செய்ய முடிந்ததேயானால், அப்பொழுது கிறிஸ்து மரித்தது வீணாயிருக்கும். நியாயப்பிரமாணத்தைக் கைகொள்ளுகிறதினாலும் அல்ல, அல்லது உங்களுடைய சட்ட பூர்வமான கருத்துகளினாலும் அல்ல, அல்லது உங்களுடைய சொந்த பரிசுத்தத்தினாலும் அல்ல, அல்லது நீங்கள் செய்கிற காரியங்களை விட்டுவிட முடிகிறதினாலும் அல்ல, நீங்கள் பொய்யுரைப்பதை விட்டு விடுகிறதினாலும் அல்ல, களவு செய்வதை விட்டுவிடுவதினாலும் அல்ல, புகை பிடிப்பதை விட்டுவிடுவதினாலும் அல்ல, திரைப்பட காட்சிகளுக்கு செல்வதை விட்டுவிடுவதினால் அல்ல, நீங்கள் இதையெல்லாம் விட்டும் இன்னமும் இழக்கப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். எந்தக் காரியமும் அதைச் செய்திட முடியாதே! சபைகளைச் சேர்ந்துகொள்ளுதல், சடங்குகள், விழாக்கள், ஸ்நானங்கள், சபையின் ஒழுங்குகள், கோட்பாடுகளை வாசித்தல், ஜெபங்களைக் கூறுதல், அந்தக் காரியங்கள் யாவும் ஒரு பொருட்டாக எண்ணப்படமாட்டாது. நீங்கள் இழக்கப்பட்டவராகவே இருக்கிறீர்களே! நீங்களாகவே எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது, ஏனென்றால் நீங்கள் ஆக்கினைத்தீர்ப்பக்குட்பட்ட ஒரு பாவியாய் இருக்கிறீர்கள். உங்களுக்குள்ளாக எந்த வழியுமே இல்லை, அல்லது எந்தக் கோட்பாடோ, அல்லது நீங்கள் செய்யக் கூடிய அல்லது சிந்திக்கக் கூடிய வழி ஒன்றுமே இல்லை, தேவனுடைய சமுகத்தில், நீங்களாகவே ஒரு காரியத்தில் தகுதியைப் பெறக்கூடிய வழியே கிடையாது, ஏனென்றால் நீங்கள் துவக்கத்திலேயே ஒரு பாவியாய் இருக்கிறீர்கள். 31 நாம் யாவரும் பாவத்திலே பிறந்து, அக்கிரமத்திலே உருவாகி, பொய் பேசுகிறவர்களாய் இந்த உலகத்தில் வந்தோம் என்று வேதாகமம் அறிவிக்கிறது. ஒரு மனிதன் இன்னொருவனுக்காக மரிப்பதை தேவனாலே ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனென்றால் அவனும் இவனைப் போலவே குற்றவாளியாய் இருக்கிறான். இந்தப் பட்டணத்திலே மிகவும் கீழ்தரமான குடிகாரன் எப்படி தேவனுடைய சமூகத்தில் குற்றவாளியாய் இருக்கிறானோ அது போலவே இந்த உலகத்தில் பிறந்த பேராயரும் இருக்கிறார். ஆகையால் ஒருவன் இன்னொருவனுக்காக பரிகாரம் செய்ய முடியாது. 32 ஆகையால், அவர் ஒரு குற்றமற்ற ஒரு மிருகத்தின், ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியின் ஜீவனை எடுத்துக்கொண்டார். பழைய ஏற்பாட்டில், நியாயப்பிரமாணத்தின்படி, ஒரு மனிதன் பாவம் செய்தபோது, அவன் ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியை பலிபீடத்தண்டை கொண்டு வந்தான். அவன் ஏதாவது ஒரு கட்டளையை மீறியிருப்பானானால், அவன் செம்மறி ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்து, பலிபீடத்தின் மேல் வைத்து, அவன் தன்னுடைய கைகளை அந்த ஆட்டுக்குட்டியின்மேல் வைத்து, தான் தவறாயிருந்தான் என்றும், அவன் ஒரு குற்றவாளியாயிருந்தான் என்றும் அறிந்தவனாய், தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்தான். குறித்த…இருந்த…நியாயப்பிரமாணத்திற்கு மரணம் தேவைப்பட்டது. ஆகவே அவன் தனக்குப் பதிலாக ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்தான். அவன்…அந்தச் சிறு மிருகத்தின் தொண்டை வெட்டப்படும்போது, அது தன்னுடைய சிறு கால்களை உதைத்துக் கதற ஆரம்பிக்கும். நீங்கள் எப்பொழுதாவது ஒரு செம்மறி ஆட்டுக்குட்டி அடிக்கப்படுகிறதைப் பார்த்திருப்பீர்களானால், அது என்ன ஒரு பரிதாபமான கதறலாயிருக்குமே! அந்த பரிதாபமான பிராணி கதற முயற்சிக்க, அதனுடைய கழுத்தின் நரம்போ வெட்டப்பட்டிருக்கும். அது உதைத்துக்கொண்டு துடிக்கிறது, பின்னர் அது விறைக்க ஆரம்பிக்கும்போது, அப்பொழுது மீண்டுமாய் துடித்துக் கதறுகிறது. அப்போது இரத்தமானது பீறிட்டு, அது அதனுடைய சிறிய உரோமத்தையும் ஆராதனை செய்கிறவனின் கைகளையும் நனைத்துவிடுகிறது. 33 அந்த ஆராதனை செய்கிறவன் தான் செய்த விபச்சாரத்திற்காகவும், பொய்யுரைத்தலுக்காகவும், திருடினதற்காகவும், அவனுடைய குற்றம் என்னவாயிருந்தாலும், அல்லது பொல்லாத சிந்தைக்காகவும் கூட, அது எவ்வளவு சிறிய நிழலாட்டமான காரியமாயிருந்தாலும், அவன் குற்றவாளியாயிருந்தான் என்று அதை உணர்ந்து கொள்கிறான், ஏனெனில் அது அவனுடைய இயல்பான தன்மையாயுள்ளது. அவன் ஒரு குற்றமுள்ள நபராய் இருந்தான், அவன் குற்றவாளியாயிருப்பது அவனுடைய வாஞ்சையினால் ஒருவேளை இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவன் இயல்பாகவே குற்றவாளியாய் இருக்கிறான். எனவே இந்த சிறிய குற்றமற்ற செம்மறி ஆட்டுக்குட்டி தன்னுடைய ஸ்தானத்தில் மரித்தது என்பதை அவன் அடையாளங்கண்டு கொள்ள வேண்டியதாயிருந்தது. அவன் அந்த சிறிய ஜீவனுக்காக மனம் வருந்தினான். 34 ஆனால் அந்த மனிதனோ, அந்த செம்மறி ஆட்டுக் குட்டியானது கடைசியாக மரித்தவுடனே, அவனுடைய கரங்களிலே அந்த செம்மறி ஆட்டுக்குட்டியின் இரத்தத்தோடு, அவனுடைய இருதயத்திலே, அவன் முதலில் கொண்டிருந்த அதே வாஞ்சையோடு அந்த கட்டிடத்தை விட்டு நடந்து செல்கிறான். ஏன்? ஏனென்றால் அந்த சிறு ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் இருந்த ஜீவனானது…ஜீவன் இரத்தத்தில் உள்ளது. உங்களுடைய ஜீவனும் உங்களுடைய இரத்தத்தில் தான் உள்ளது. நாம் அதை அறிந்திருக்கிறோம். ஆட்டுக்குட்டியின் இரத்தத்திற்குள் இருந்த ஜவன் அது மிருகத்தின் ஜீவனாயுள்ளது, ஆகையால் அதினுடைய சிறு இரத்த அணுக்கள் உடைக்கப்பட்டு, அந்த மிருகத்திலிருந்த ஜீவனானது பிரிந்துசென்றபோது, அது அந்த ஆராதனை செய்கிறவனிடம் திரும்பி வர முடியவில்லை, ஏனென்றால் ஆராதனை செய்கிறவன் ஒரு மனிதனாய் இருக்கிறான். 35 இரத்தமானது ஒரு மூடுதலைச் செய்தது, ஆனால் அதினால் முழுமையான பரிகாரத்தை செய்ய முடியவில்லை; ஏனெனில் அந்த மனிதன், முதலில் அவன் கொண்டிருந்த, பாவம் செய்யக் கொண்டிருந்த அதே வாஞ்சையோடே கட்டிடத்தை விட்டு கடந்து சென்றான். ஆனால், இதை செய்கிறதினாலே, அவன் வரப்போகிற ஒரு பரிபூரணமான செம்மறி ஆட்டுக் குட்டியின் ஒரு நேரத்தையே எதிர்நோக்கிக்கொண்டிருந்தான். அவன் இதை தகனபலியின் பேரில் செலுத்தினான், ஏனென்றால் அதைக் குறித்து அவன் அறிந்திருந்த ஒரே வழியாய் அது இருந்தது. 36 ஆகையால், நீங்கள் பாருங்கள், இரத்தமானது கொட்டிக்கொண்டிருக்கும்போது, அந்த மிருகத்தினிடமிருந்து ஜீவன் பிரிந்துசென்றபோது, அது மீண்டுமாய் மனிதனிடத்திற்கு திரும்பி வரமுடியவில்லை; ஏனென்றால், ஒன்று மிருகமாயிருந்தது, ஒன்று மனிதனாயிருந்தது; ஒரு குற்றமுள்ள மனிதனுக்கு, ஒரு குற்றமற்ற மிருகம். 37 ஆனால், ஓ, ஒரு நாளிலே, சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக, பெத்லகேமிலே தேவனுடைய ஆட்டுக்குட்டி ஒரு சிறிய முன்னணையில் பிறந்து, அடிக்கப்படுவதற்கு கொண்டு செல்லப்படும் ஆட்டுக்குட்டியைப் போல் கொண்டு செல்லப்பட்டார். சுமார் ஆயிரத்து தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்பாக, இந்த பிற்பகல் வேளையிலே, மூன்று மணியளவில் அவர் மரித்தார். கறையற்ற, குற்றமற்ற தேவ ஆட்டுக்குட்டி கல்வாரியின் சிலுவையிலே தொங்கி ஒவ்வொரு பாவிக்காகவும் மரித்தார். இப்பொழுது ஆராதனை செய்கிறவன் இந்த ஆட்டுக்குட்டியிடம், விசுவாசத்தினாலே வரும்போதே! இது வேறுவிதமான ஒரு ஆட்டுக்குட்டியாயுள்ளது. இது மற்ற ஆட்டுக்குட்டியைப்போல அல்ல. 38 தேவன் முதலாவதாக ஒருவனை இழுத்துக் கொள்ளாமல், எந்த ஒரு மனிதனும் இந்த ஆட்டுக்குட்டியினிடம் வரமுடியாது. தேவனுடைய இராஜாதிபத்தியத்தை நீங்கள் பார்த்தீர்களா? ஓ, இது இப்பொழுது ஆழமாய் பதியும் என்று நான் நினைக்கிறேன். கவனியுங்கள். தேவன் இந்த உலகத்தில் செம்மறியாடுகளை உடையவராயிருந்தார் என்பதை அறிந்திருந்தார். அவர் இரட்சிக்கப்படப்போகிற ஜனங்களை உடையவராயிருக்கப்போவதை தாம் அறிந்திருந்தார், ஆகையால் இரட்சிக்கப்படப்போகிறவர்களை அவருடைய அன்பு கீழே நோக்கிப்பார்த்தது; ஆகையால், முன்னறிதலினாலே, அக்கரையிலே அவரை சந்திக்கத்தக்க கறைதிறையற்ற ஒரு சபையை அவர் முன்குறித்தார். இப்பொழுது தேவனுக்கு கறைதிறையற்ற ஒரு சபை தேவைப்பட்டதானால், அதை அந்தவிதமாக உருவாக்க அவர் ஏதோ ஒரு காரியத்தை உடையவராயிருக்க வேண்டியதாயிருந்து. அவரால் அதைக் கேட்க முடியாமலும், அதை உருவாக்கும்படியான ஒரு வழியும் இல்லாதிருந்திருந்தால், அவருடைய நீதியும், நியாயத்தீர்ப்புகளும் அப்படிப்பட்ட ஒரு காரியத்தை அவர் கேட்க அனுமதித்திருக்க முடியாது. 39 மனிதனாலே அந்த காரியத்தை தானாகவே செய்ய முடியாது. அவனோ முற்றிலும் தோல்வியடைந்தவனாயிருக்கிறான். அவனை நியாயப்பிரமாணத்தின் மூலமாகவும், நியாயாதிபதிகளின் மூலமாகவும், மற்றும் பழைய ஏற்பாடு முழுவதினூடாகவும் அதைக் காணும்படி தேவன் அனுமதித்தார். அவர் தீர்க்கதரிசிகளை அனுப்பினார், அவர் நீதியுள்ள மனிதனை அனுப்பினார், ஒவ்வொருவரும் தோல்வியுற்றதை அவர்கள் கண்டறிந்தனர். 40 ஆகையால், தேவன் தம்முடைய இராஜாதிபத்திய கிருபையினாலே, மகிமையின் நுழைவாயிலிலிருந்து, நம்முடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள, தம்முடைய ஒரேபேறான குமாரனை அனுப்பினார். 41 நினைவிருக்கட்டும், அவர் இந்த ஸ்தானத்தை எடுக்கும்படி ரோமிலுள்ள போப்பிடம் சொல்லியிருப்பாரானால், அவரால் அதைச் செய்திருக்க முடியாது. அவர் கேன்ட்ரிபரியின் பேராயரிடம் இதைச் செய்யச் சொல்லியிருந்தால், அவராலும் அதை செய்திருக்க முடியாது. உலகத்திலேயே மிக பரிசுத்தமான சங்கை பாதிரியாரையோ அல்லது பேராயரையோ கூப்பிட்டிருந்தால், அவராலும் அதை செய்திருக்க முடியாது. யூதாஸ் ஸ்காரியோத் புறக்கணிக்கப்பட்டிருந்தைப் போன்ற அவரும் புறக்கணிக்கப்பட்டவராய் இருந்திருப்பார். அவரால் அதைச் செய்திருக்க முடியாது, ஏனென்றால் அவர் “பாவத்திலே பிறந்து, அக்கிரமத்திலே உருவாகி, பொய் பேசுகிறவராய் இந்த உலகத்திற்கு வந்திருந்தார்,” முதலாவது அவருக்கே ஒரு பரிகாரம் அவசியமாயிருக்கிறது. 42 அல்லேலூயா! ஆனால் மகிமையின் நுழைவாயிலிலிருந்து ஒருவர் வந்தார்; அவர் வேறுயாருமல்ல, ஒரு மனிதனல்ல, ஒரு நல்ல மனிதனல்ல, ஒரு யூதனுமல்ல அல்லது ஒரு புறஜாதியுமல்ல. அவர் மானிட சரீரத்தில் மறைந்திருந்த சர்வ வல்லமையுள்ள தேவனேயன்றி வேறொருவருமில்லை. அவர்தாமே, தம்முடைய சொந்த இரத்தத்தை பலியாய் கொடுக்கும்படி வந்தார், ஏனென்றால் அது பாலியல் மூலமாக வரவில்லை. பாலியலுக்கு அதனோடு எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவர் ஒரு கன்னிகையின் மேல் நிழலிட்டு, அவர்தாமே சிருஷ்டித்த ஒரு இரத்த அணுவிலிருந்து அந்த குற்றமற்ற ஒருவரைக் கொண்டு வந்தார். 43 அப்படியானால் இன்றிரவு என்னுடைய இரட்சிப்பும், உங்களுடைய இரட்சிப்பும், நம்முடைய சொந்த கிரியைகளின் தகுதிகளின் பேரில் சார்ந்திருக்கவில்லை. அவருக்குள் நம்மைத் தெரிந்து கொண்ட சர்வ வல்ல தேவனுடைய ஆக்கப்பூர்வமான இராஜாதிபத்திய கிருபையின் பேரில் சார்ந்ததாயுள்ளது. நிச்சயமாக, நான் ஒருபோதும் பரிபூரணமாயிருக்க முடியாது, நீங்களும் ஒருபோதும் பரிபூரணமாயிருக்க முடியாது. நாம் பரிபூரணமாயிருப்போம் என்று உரிமை கோருகிறதில்லை. ஆனால் நம்முடைய விசுவாசம் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பரிபூரணமான பலியில் இளைப்பாறுகிறது என்ற ஒரு ஆறுதலை நாம் பெற்றுள்ளோமே! 44 அப்படியென்றால், நாம் அதை எப்படி பெற்றுக்கொள்கிறோம் என்பதை நாம் அறிவோம்? ஆராதனை செய்கிறவன் விசுவாசத்தினாலே தன்னுடைய கரத்தை கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தின்மேல் வைத்து, பாவத்தின் கொடூரத்தை உணர்ந்து, அவருடைய முகத்திலுள்ள பரியாச எச்சிலையும், கெத்சமனேயின் முனகல்களையும், கல்வாரியின் கடுந்துயரங்களையும் உணர்ந்து, தான் பாவி என்று அறிந்து, தன்னுடைய பாவங்களை சரியாக அறிக்கை செய்து, “ஓ ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தாவே, நான் குற்றவாளியாயிருக்கிறேன். நீர் எனக்கு உதவி செய்தாலொழிய வேறு எந்த வழியும் இல்லை. விசுவாசத்தினாலே…நீர் அழைத்துக்கொண்டிருக்கிறீர், பரிசுத்த ஆவியானவர் வந்துள்ளபடியால், என்னை வரும்படி அழைக்கிறார். நான் இப்பொழுது, விசுவாசத்தினாலே இயேசுவையே என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொல்வான். கல்வாரியில் அவரிடமிருந்து புறப்பட்டு வந்த அந்த ஜீவன், பரிசுத்த ஆவி என்றழைக்கப்படுகிறது, அது கர்த்தராகிய இயேசுவின் இரத்த அணுவுக்குள் மறைந்திருந்தது, அது ஆராதனை செய்கிறவனிடம் திரும்ப வந்து அவனை கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக, பரிசுத்த ஆவியினாலே அபிஷேகிக்கிறது. 45 அவர் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டவராய் இருக்கிறார். எனவே நீங்கள் நியாயத்தீர்ப்பை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. அந்த அவலமான சிலுவையேற்றத்தை நான் நோக்கி பார்க்கும்போது, அவருடைய சரீரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறதாய்…அது உள்ளது என்பதை நான் உணருகிறேன். இப்பொழுது அந்த சரீரம் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டாயிற்று. தேவனால் அதை மீண்டும் நியாயப்படி நியாயந்தீர்க்க முடியாது, ஏனென்றால் அது ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டாயிற்று. தேவன் மரணத்தின் நியாயத்தீர்ப்பு களை அந்த சரீரத்தின்மேல் தாக்கினார். ஒ, நான் அந்த சரீரத்திற்குள்ளாக மறைந்திருக்கத்தக்க ஒரு வழியை நான் கண்டுபிடிக்கும் வரை! அவருடைய நியாயத்தீர்ப்பு உனக்காகவும் எனக்காகவும் வழங்கப்பட்டது. நாம் விடுதலையாயிருக்கிறோமே! ரோமர் 8:1-ல், “அப்படியானால் கிறிஸ்து இயேசுவுக்குட்டபட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை” என்று கூறப்பட்டுள்ளது. அங்கேதான் உங்கள் காரியமே உள்ளது, ஆக்கினைத்தீர்ப்பில்லையே! ஆகவே என்ன வந்தாலும் அல்லது என்ன போனாலும் எனக்கு கவலையில்லை, நீங்கள் அந்த இரத்தத்தின் கீழ் மறைக்கப்பட்டிருக்கிறீர்கள். 46 மீண்டும் பார்ப்போம், நாம் எப்படி அந்த சரீரத்திற்குள் பிரவேசிக்கிக்றோம்? முதலாம் கொரிந்தியர் 12:13, “ஒரே ஆவியினாலே!” என்று கூறுகிறது. ஆவியானது எப்படி வருகிறது? பலியின் மூலமாக. ஆவி எங்கே இருந்தது? இரத்தத்திற்குள். ஏன் மிருகத்தின் ஆவியினால் திரும்ப வர கூடாமற்போயிற்று? காரணம் அது மிருகமாயிருந்தது. ஒரு மிருகத்தின் ஆவி மனிதனின் ஆவியினிடத்திற்கு வந்து எதையும் செய்ய முடியாமற்போயிற்று, ஏனெனில் மானிட ஆவியானது மிருகத்தைக் காட்டிலும் ஒரு உயரிய ஜீவனைக் கொண்டதா யிருந்தது. ஆனால் வேறெந்த மனிதனின் ஆவியும் திரும்பவும் வரமுடியாது. நீங்கள் மரித்த சில மூதாதையோரின் ஆவியைப் பெற்றிருந்தால், அது மரித்த ஆவியுலகத் தொடர்பாகும். ஆனால் தேவன்தாமே, தம்முடைய சொந்த ஆவியியோடு இறங்கி வந்தார், அது எல்லாவற்றிற்கும் மேலான ஆவியாய் இருக்கிறது, அது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் ரூபத்திலே திரும்பி வந்து, ஆராதனை செய்கிறவனை கிறிஸ்துவின் இரத்தத்தினூடாக, அவனை அந்த சரீரத்திற்குள் கொண்டு செல்கிறது. அவன் பாதுகாப்பாயிருக்கிறானே! 47 கவனியுங்கள். காளைகள் மற்றும் ஆட்டுக்கடாக்களின் இரத்தம் கிரியை செய்யவில்லை, அது பெலவீனமாயிருந்ததைக் காண்கிறோம். இப்பொழுது 12-ம் வசனத்திலிருந்து நாம் தொடர்ந்து வாசிப்போமாக. சரி. காளைகள் மற்றும் ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தினால் கிரியை செய்யவும் முடியவில்லை, பரிகாரமும் செய்ய முடியவில்லை. கவனியுங்கள். இவரோ, (எந்த மனிதன்? பேராயரா? இல்லை. போப்பா? இல்லை.)… இவரோ, பாவத்திற்காக ஒரே பலியைச் செலு…என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் காத்துக் கொண்டிருக்கிறார். 48 நீங்கள் ஆயத்தமாய் இருக்கிறீர்களா? நீங்கள் வார்த்தைக்காக ஆயத்தமாயிருக்கிறீர்களா? இதற்கு செவிகொடுங்கள், அதன்பின் இது உங்கள் இருதயத்தின் ஆழத்தில் செல்ல வேண்டுமென நான் விரும்புகிறேன். கூர்ந்து கவனியுங்கள். ஒரே பலியினாலே (வருடா வருடமல்ல, எழுப்புதலுக்குப் பின் எழுப்புதல் என்றல்ல, கூட்டத்திற்குப் பின் கூட்டம் என்றல்ல, நாளுக்கு நாள் அல்ல)… ஆனால் ஒரே பலியினாலே இவர் பூ-ர-ண-ப்-ப-டு-த்-தி-யி-ரு-க்-கி-றா-ர் (அவர்களையா? இவர் செய்துள்ளாரே!)… …பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே (அதுவே தேவனுடைய தேவை) இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். 49 அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அதுதான் கிறிஸ்து மரித்ததற்கான பதிலாயுள்ளது. அதுதான் கல்வாரிக்கான பதிலாயுள்ளது. அவர் முற்றிலுமாய், தன்னுடைய சொந்த இரத்தத்தினாலே, நம்முடைய பாவங்களை கிரயத்தினாலே வாங்கி, அவருடைய விசுவாசிகளை, என்றென்றைக்குமாய் பூரணப்படுத்தியிருக்கிறார். ஆகையால் கிறிஸ்துவுக்குள்ளாக நாம் கறைதிறையற்றவர்களாய், சர்வ வல்லமையுள்ள தேவனின் பிரசன்னத்தில் பூரணப்பட்டவர்களாய் நிற்கிறோம். நம்முடைய சொந்த கோட்பாடுகளோடு, நாம் சிலாக்கியமற்ற ஜனங்களாய் இருக்கிறோம்; நாம் எழும்பி ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, ஒரு குறிப்பிட்ட காரியத்தை நாம் செய்ய வேண்டும் என்று நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம். இல்லை, என் சகோதரனே, அது நீ செய்யதுள்ளது ஒன்றுமேயில்லை என்பதாகும்; அது தேவன் உனக்காக என்ன செய்தார் எனபதாயுள்ளதே! அதுவே இப்பொழுது நம்முடைய காரியம், இப்பொழுது நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டோமென்றால், நாம் தேவனுடைய சமூகத்திலே என்றென்றுமாய் பரிபூரணப்பட்டவர்களாயிருக்கிறோம். 50 ஆகையால் இயேசு, “நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” என்றார். அப்படியானால், அது என்றென்றைக்கும் பரிபூரணப்படுத்தப்பட்டதாயிருந்ததுது. தேவன், கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக, ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, உலக தோற்றத்திற்கு முன்னரே அவர் முன்கண்ட விசுவாசியை என்றென்றைக்குமாய் இன்று பரிபூரணப்படுத்தினார். எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். “எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ, அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை ஏற்கனவே மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.” அவர் தம்முடைய விசுவாசிகளை பரிபூரணப்படுத்தியிருக்கிறாரே! 51 இப்பொழுது கவனியுங்கள், நாம் இப்பொழுது 1-ம் வசனத்திற்கு திரும்பிச் செல்வோமாக. …நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டு வருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவரை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது. 52 கவனியுங்கள், நாம் “பரிபூரணத்தைக்” குறித்துதான் பேசிக்கொண்டிருக்கிறோம். பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர் ஒருதரம் சுத்தமாக்கப்பட்ட பின்பு, இன்னும் பாவமுண்டென்று உணர்த்தும் மனசாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா? 53 நீர் என்ன பொருட்படுத்துகிறீர்? அங்கு உள்ள மனசாட்சி என்ற வார்த்தைக்கு “வாஞ்சை” என்பதே சரியான வியாக்கியானம். ஒரு மனிதன், ஆராதனை செய்கிறவன் சரியாக கிறிஸ்துவுக்கு முன்பாக வந்து, அவருடைய பாடுகளை கண்டு, அவன் தன்னையே கிறிஸ்துவுக்கு ஒப்புவித்து, “ஓ தேவனாகிய கர்த்தாவே, பாவ பரிகாரம் செய்யக்கூடிய எதுவும் என்னில் இல்லை, ஆனால் நான் முழுவதுமாக உம்மையே சார்ந்துகொண்டிருக்கிறேன்” என்று கூறுவானானால், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அந்த மனிதனின் இருதயத்திற்குள்ளாக வருகிறார், அப்பொழுது பாவத்திற்கான கேள்வியோ என்றென்றைக்குமாய் தீர்க்கப்படுகிறது, அதன்பின்னர் பாவத்தின் வாஞ்சை ஒவ்வொன்றும் உங்களிடமிருந்து எடுக்கப்பட்டுவிடுகிறது. இப்படியிருக்க நியாயப்பிரமாணத்தினால் அதனைச் செய்ய முடிந்திருந்தால், அந்தப் பலிகளை நிறுத்தியிருக்க வேண்டியதில்லையே; ஆனால் அதைச் செய்ய முடியாதிருந்தபடியால், நம்மைப் பரிபூரணப்படுத்த, கிறிஸ்து மரிக்க வேண்டியதாயிருந்தது. 54 நண்பர்களே, பரிபூரணத்தை குறித்து, நாம் பல காரியங்களை இன்றிரவு கூற முடியும். நாம் எப்பொழுதுமே நம்மை மற்றவர்களைக்—மற்றவர்களைக் காட்டிலும் சற்று பரிசுத்தமானவர்கள் என்று காட்டும்படி அவர்களுடைய கண்களை பிடுங்கி எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் அந்தக் காட்சியை மாத்திரம் உற்றுநோக்கியிருந்தால், நாம் இவ்விதமாய் இருப்பது என்பது தேவனுடைய கிருபையினால் மாத்திரமே. 55 இங்கே அண்மையில், ஒஹையோவில், நான் ஒரு பாடத்தை கடினமான முறையிலே கற்றுக்கொண்டேன். நான் ஒஹையோவிலே ஒரு கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தபோது, நான் அந்த தேசத்திற்கு வெளியே தங்கிக்கொண்டிருந்தேன். திரளான கூட்டத்தின் காரணமாக, என்னால் நகரத்திற்குள் தங்க முடியவில்லை. 56 நாங்கள் டங்கார்டு என்னும் ஒரு சிறிய உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அத்தகைய அழகான சிறிய பணியாளர்கள், ஒழுக்கமான ஆடையணிந்து, அவர்கள் அவ்வளவு சுத்தமாக, பெண்மணியைப்போல எங்களுக்காக காத்திருந்தனர். அத்தகைய ஒரு இடத்தில் சாப்பிடுவது, அது ஒரு சிறு பரலோகத்தின் இடம் போன்றிருந்தது. அவர்களுடைய சமையலறை மிகவும் சுத்தமாக இருந்தது. ஞாயிற்றுக் கிழமையன்று அவர்கள் மூடிவிட்டு, அவர்கள் தங்களுடைய சபைக்குச் சென்றனர். நான் சற்று பசியாயிருந்தேன், ஞாயிறு பிற்பகல் நான் பிரசங்கிக்கப் போவதாயுமிருந்தேன். 57 ஆகவே நான் ஏதாவது சாப்பிடும்படி, வழக்கமான சிறிய…ஒரு சாதாரண அமெரிக்க உணவகத்திற்குச் சென்றேன். அங்கே நான் வாசலில் உள்ளே நுழைந்ததும், ஒரு சூதாட்ட கருவி சுற்றுகிற சத்தத்தைக் தவிர வேறென்ன நான் கேட்டேன்! அங்கே என் வயதுடைய ஒரு மனிதன் நின்றுகொண்டிருந்தார், அவர் ஒருவேளை ஒரு விவாகமான மனிதனாயிருந்திருக்கலாம், அவர் தன்னுடைய கரத்தை ஒரு ஸ்திரீயின் மீது போட்டுக்கொண்டு, ஒரு சூதாட்டக் கருவியில் விளையாடிக்கொண்டிருந்தார். நம்முடைய சட்டமும், நம்முடைய நீதியின் பாதுகாப்பும், நம்முடைய நன்மைகளையும் பாதுகாக்க வேண்டியவராயிருந்த அவரே அங்கு நின்றுகொண்டு அந்த காரியத்தை மீறி அதை செய்துகொண்டிருந்தார். ஏனெனில், ஓஹையோவில் சூதாடுவது, ஒரு சூதாட்டக் கருவியில் விளையாடுவது சட்ட விரோதமானதாயுள்ளது. 58 அதன்பின் நான் அந்த கட்டிடத்தின் பின் பகுதியை பார்க்கும்படி திரும்பினேன், அங்கே பத்தொன்பது வயதிற்குட்பட்ட ஒரு கூட்ட வாலிபர்கள், ஒரு பழைய ராக் அண்டு ரோல் இசைத்தட்டுகள் இசைக்கருவியில் இசைத்துக்கொண்டிருக்க, அவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். சுமார் பதினெட்டு வயதுடைய ஒரு இளம் பெண், ஒரு ஸ்தீரிக்குரிய அவளுடைய உடற்கூறியல் மிகவும் சீராயிருந்தது. ஆனால் அவள் தன்னுடைய ஆடையோ கேவலமாக முன்னால் தொங்கிக்கொண்டிருப்பதோடு அங்கே நின்றுகொண்டு, அந்த பையன்களில் ஒருவன் தன் கரங்களை அவள் மீது வைக்கக்கூடாத இடத்தில் வைத்துக் கொண்டிருந்தான். அவர்கள் குடித்துக்கொண்டும் புகைப்பிடித்துக்கொண்டும் இருந்தனர். அப்பொழுது நான், “ஓ தேவனே, எப்படி உம்மால் இதை சகித்துக்கொள்ள முடிகிறது?” என்று நினைத்தேன். 59 பிறகு நான் யாரோ ஒருவர் சத்தமாக பெருமூச்சுவிடுகிறதை கேட்டபோது, நான் என்னுடைய வலப் பக்கமாய் நோக்கிப் பார்த்தேன். அப்போது அங்கே அநேகமாக அறுபது, அல்லது எழுபது வயதுடைய ஒரு வயதான ஸ்திரீ அமர்ந்திருந்தாள். அவள் மிகவும் அசிங்கமான ஒரு சிறிய ஆடையை உடுத்தியிருந்தாள், அது சுமார் அவளுடைய முட்டிகளுக்குமேல் பாதியளவேயிருக்க, அவளுடைய வயோதிக சுருக்கம் விழுந்த மாம்சமோ அவ்வளவாய் தளர்ந்து தொங்கிக்கொண்டிருந்தது. அவள் இங்குள்ள இந்த உதட்டுக்கு சாயம் பூசியிருந்தாள், மேலும் அவளுடைய முகத்தின் ஒரு பக்கம் ஊதா நிற வண்ணத்தில் ஏதோ ஒன்று பெரியதாய் பூசப்பட்டிருந்தது; அவள் சிறிய ஒரு ஜோடி காலணிகளை, பாதரட்சைகளை அணிந்து, தன்னுடைய கால் விரல்களில் ஊதா நிற சாயம் பூசியிருந்தாள்; கை விரல்களிலும் ஊதா நிற சாயம் பூசப்பட்டிருந்தது. மேலும் அவளுடைய முடி உண்மையாகவே மிகக் குட்டையாக வெட்டப்பட்டு, சுருட்டிவிடப்பட்டிருக்க, அதற்கு நீல நிற சாயத்தை பூசியிருந்தாள். நான் அவளை நோக்கிப் பார்த்தேன். 60 அந்த மேசையின் எதிரில் இரண்டு பேர் குடிபோதையில் அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவன், (அது வெயில் காலமாயிருந்தது) ஒரு பெரிய பழைய ராணுவ மேலாடையுடன், ஒரு சாம்பல் நிறத் துண்டை தன்னுடைய கழுத்தில் சுற்றியிருந்தான், அவனுடைய மீசை அவனுடைய முகத்தை மறைக்கும் அளவிற்கிருந்தது. அவர்கள் தாங்களாகவே பொறுத்துக்கொண்டு, அந்த மனிதன் அவளிடமிருந்து எழுந்து, இந்த விதமாய் கழிவறையை நோக்கி நடந்து சென்றான். 61 நான் அங்கேயே நின்றுவிட்டேன். நான், “தேவனே, நீர் ஏன் முழு காரியத்தையும் அழித்துவிடக்கூடாது? நீர் ஏன் இதை பூமிக்கடியில் மூழ்கடித்துவிடக் கூடாது?” என்று கூறினேன். மேலும் நான், “என்னுடைய சாராளும், ரெபேக்காளும் அதைப் போன்றே இப்படிப்பட்ட காரியங்களுக்கு கீழாகத்தான் வளர வேண்டியிருக்கிறதா?” என்றேன். நான், “தேவனே, உம்முடைய மகா பரிசுத்தத்தில், அதைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எப்படிப் உம்மால் பார்த்து சகித்துக் கொண்டு, நிலநடுக்கத்தை அனுப்பி மூழ்கடிக்காமலிருக்க முடிகிறது?” என்றேன். 62 நான் அங்கே நின்றுகொண்டு, அந்த ஸ்திரீயை கண்டித்துக்கொண்டிருந்தபோது, நான் அவ்வாறிருந்தபோது, நான் கதவின் பின்பக்கமாக அடியெடுத்து வைத்தேன். அப்படியே கதவிற்கு பின்னால் அடியெடுத்து வைத்தபோது, நான் தேவ ஆவி என்னிடம் வருவதை உணர்ந்தேன். 63 அப்பொழுது நான் ஏதோ ஒன்று சுழன்றுகொண்டிருப்பதைப் போன்று கண்டேன். அது தரிசனமாய் இருந்தது, அதிலே இந்த உலகம் சுற்றிக்கொண்டேயிருந்தது. அதை நான் கவனித்தபோது, இந்த உலகத்தைச் சுற்றிலும், ஒரு சிவப்பு நிறக் கீற்று இருந்தது. நான் உலகத்திற்கு வந்தபோது, நான் ஒரு சிறு பையனாய், நான் செய்யக்கூடாத காரியங்களை செய்வதை, நானே கண்டேன்; அதைப் போன்று இல்லாமலிருந்திருக்கலாம், ஆனாலும் அது பாவமாயிருந்தது. நான் ஒவ்வொரு முறையும் ஏதாவது காரியத்தைச் செய்தபோது, அந்த பெரிய கருத்த நிழல் பரலோகத்தை நோக்கிச் செல்வதை நான் கண்டேன். அதினிமித்தமாக, தேவன் அந்த நிமிடத்திலேயே என்னைக் கொன்று போட்டிருந்திருப்பார். 64 அப்பொழுது தேவனுக்கும் எனக்குமிடையே, அந்த பரிபூரணமான பலி நிற்பதை நான் கண்டேன். அவருடைய தலையிலே முட்களோடும், அவருடைய முகத்தில் எச்சில் வழிவதோடும் அவர் அங்கு நின்று கொண்டிருந்ததைக் கண்டேன். ஒவ்வொரு முறையும் என்னுடைய பாவங்கள் பரலோகத்தை நோக்கி செல்லத் துவங்கும்போது, அவர் காரில் உள்ள முட்டுத்தாங்கியைப் போல, அது செல்லாதபடித் தடுத்துவிடுவார். அவர் மரணத்திலிருந்து என்னை பாதுகாத்துக்கொண்டிருந்தார். நான் ஒவ்வொரு முறையும் ஏதாவது காரியத்தை தவறாகப் செய்யும்போது, தேவன் என்னை கொன்று போட்டிருப்பார். நிச்சயமாகவே, அவருடைய பரிசுத்தத்திற்கு அது தேவைப்படுகிறது. அவருடைய நியாயப்பிரமாணத்திற்கு அது தேவைப்படுகிறது. ஒவ்வொரு முறையும் நான் எதையாவது செய்யும்போது, அல்லது நீங்கள் எதையாவது செய்யும்போது, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஒரு முட்டுததாங்கியைப்போல செயல்படுகிறது. எனவே நான் அந்த சிவப்புநிறக் கீற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டேன், அப்படியானால், அந்த இரத்தம்தான் இன்னமும் பூமியைத் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறது. 65 நான் நின்று நோக்கிப் பார்த்தபோது, நான் அவரை கவனிக்கையில், நான் அவருக்கு சற்று நெருக்கமாகச் சென்றேன். அப்பொழுது அவர், “பிதாவே, இவனை மன்னியும், அவன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதை அவன் அறியாதிருக்கிறான்” என்று கூறுவதை என்னால் கேட்க முடிந்தது. நான் நோக்கிப் பார்த்தபோது, ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு பக்கத்திலே பதிவுசெய்யும் ஒரு தேவதூதன், அவருக்குப் பக்கத்தில் அங்கே நின்று கொண்டிருந்தான். நான் ஒவ்வொரு முறையும் பாவம் செய்தபோது, அது அந்த புத்தகத்திலே பதிசெய்யப்பட்டிருந்தது. என்னுடைய பெயரும் அதின் மேல் இருந்தது. என்றோ ஒருநாள், நான்…அந்த இரத்த கீற்றுகள் நீக்கப்படும்போது, நான் தேவனுடைய சமூகத்தில் என்னுடைய பாவ ஜீவியத்தோடு நிற்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன். ஆனால், அவருடைய இரக்கத்தினாலே என்னுடைய நியாயத்தீர்ப்பை நிறுத்தி வைத்திருந்தார் என்பதை நான் புரிந்துகொண்டேன். 66 எனவே நான் தாழ்மையோடு, அவரிடம் நடந்து சென்றேன். நான் முழங்கால்படியிட்டேன், பின்னர் நான், “ஓ இயேசுவே, தேவ குமாரனே, உம்முடைய சமுகத்திற்கு வர நான் தகுதி இல்லாதவன். ஆனாலும் நான் செய்துள்ளதை நீர் எனக்கு தயவுசெய்து மன்னிப்பீரா?” என்று கேட்டேன். 67 அப்பொழுது அவர் தமது கரத்தை தமது விலாவில் வைத்து, அந்த பழைய புத்தகத்தை எடுத்து, அதில், “மன்னிக்கப்பட்டது” என்று எழுதி, அதை அவருக்குப் பின்னாக தூக்கி எறிந்துவிட்டார், என்னுடைய பாவங்கள் எல்லாம் ஒழிந்து போயிற்றே! பிறகு அவர் கடுமையான முகத்தோடு, என்னைப் நோக்கிப் பார்த்தார், மேலும் அவர், “இப்பொழுது நான் உன்னை மன்னித்திருக்கிறேன், ஆனால் நீயோ அவளை ஆக்கினைக்குட்படுத்த விரும்புகிறாயே” என்றார். அப்பொழுதே நான் அதன் அர்த்தம் என்ன என்பதைப் புரிந்ததுகொண்டேன். 68 நான் அந்த தரிசனத்திலிருந்து வெளிவந்தபோது, அவளிடம் நடந்து சென்றேன். அப்பொழுது நான், “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். 69 அவள் குடித்துக் கொண்டிருந்தாள். அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள், அப்பொழுது அவள், “ஓ, ஹலோ” என்றாள். அதற்கு நான் அவளிடம், “நான் இங்கு உட்காரலாமா?” என்று கேட்டேன். அப்போது அவள், “எனக்கு துணை இருக்கிறது” என்றாள். 70 அதற்கு நான், “பெண்மணியே, நான் அந்தவிதமான அர்த்தத்தில் அதைக் கேட்கவில்லை. நான் உங்களிடம் ஒரு நிமிடம் பேச விரும்புகிறேன்” என்றேன். அதற்கு அவள், “உட்காருங்கள்” என்றாள். 71 அப்போது நான், “பெண்மணியே, சில நிமிடங்களுக்கு முன்பு, அந்த கதவுக்குப் பின்னாக நின்று கொண்டிருந்தேன்…” என்று கூறினேன். பிறகு நான் கூறத் துவங்கினேன். அப்போது நான் அவளைப் பார்க்கையில், அவளுடைய கன்னங்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடத் துவங்கியது. அவள் என்னிடத்தில் கூறினாள்…நான், “பெண்மணியே, நீ இந்தக் காரியங்களை செய்ய வேண்டும் என்று கருதி செய்கிறதில்லை. இயேசு மரித்து, அவருடைய இரத்தத்தினால் தேவனுடைய நியாயத்தீர்ப்பானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீ இதைச் செய்ய வேண்டும் என்று கருதி செய்கிறதில்லை” என்றேன். 72 அதற்கு அவள், “இல்லை, ஐயா” என்றாள். மேலும் அவள், “என்னுடைய தகப்பனார் சபையிலே ஒரு உதவிக்காராக இருந்தார். நான் ஒரு கிறிஸ்தவ வீட்டிலே வளர்க்கப்பட்டேன். என்னுடைய கணவரும் நானும் அந்த சபையின் பூர்வீக அங்கத்தினராயிருந்து, ஒரு கிறிஸ்தவ ஜீவியம் செய்து வந்தோம்” என்றாள். அவருடைய மரணத்திற்குப் பிறகு என்று அவள் கூறத் துவங்கி…அவளுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்களாம். அவள் வழிதவறிப் போய்விட்டாளாம். மேலும் அந்தப் பெண்பிள்ளைகள் எப்படி அவளை விட்டுச் சென்றார்கள் என்பதையும் கூறி, அதனால் அவள் தன்னுடைய ஜீவியத்தையே தூக்கி எறிந்துவிட்டதாகவும் கூறினாள். இனி எந்த ஒரு நம்பிக்கையும் அவளுக்காக இல்லை என்றே அவள் எண்ணிக்கொண்டாள். 73 ஆனால் நான், “தேவனே, இரக்கமாயிரும்! ‘எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களை அழைத்துமிருக்கிறார்’” என்றேன். அப்போது அவள், “நீர் அங்கேயிருந்து வந்துள்ள சங்கை பிரான்ஹாமா?” என்று கேட்டாள். அதற்கு நான், “ஆம் நான்தான்” என்றேன். 74 அப்போது அவள், “நான் இந்தவிதமாக இங்கு உட்கார்ந்திருப்பதை குறித்து வெட்கப்படுகிறேன்” என்றாள். மேலும் அவள், “எனக்கு ஒரு வாய்ப்பு இருக்குமென்று நீர் நினைக்கிறீரா?” என்று கேட்டாள். 75 அதற்கு நான், “பெண்மணியே, இயேசு தமது கரங்களை விரித்து, நீ வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்” என்றேன். அப்பொழுது ஜனங்கள் புறப்பட்டுச் செல்லத் துவங்கினர். அப்பொழுது நான் அவளிடம், “நீங்கள் என்னுடன் இந்த இடத்திலிருந்து இங்கே நடந்து வருவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவள், “நான் வருவேன், ஐயா” என்றாள். 76 நான் அவளை கரத்தால் பற்றிப் பிடித்தேன். மேலும் நான், “நீங்கள் கிட்டத்தட்ட என்னுடைய தாயின் வயதினைக் கொண்டவராயிருக்கிறீர்கள். நீங்கள் என்னோடு இங்கே தரையில் முழங்கால் படியிடுவீர்களா?” என்றேன். அந்த தரையிலே, நாங்கள் அந்தப் பிற்பகல் அந்த இடத்தை ஒரு பண்டைய-நாகரீகங்கொண்ட கூட்டத்திற்கு மாற்றிவிட்டோம். தேவன் அவருடைய கிருபையினாலே, அந்த ஸ்திரீயை இரட்சித்தார். பின்னர் அவள் நன்றாக உடை உடுத்திக்கொண்டு, கூட்டத்திற்கு வந்தாள், எனக்கு தெரிந்த மட்டில் இன்றிரவு அவள் ஒரு கிறிஸ்தவ ஜீவியமே ஜீவித்துக்கொண்டிருக்கிறாள். 77 அது என்னவாயிருக்கிறது? ஓ, தேவனுக்கு பரிபூரணம் தேவைப்படுகிறதே! அவருக்கு உங்களுடைய மனந்திரும்புதல் தேவைப்படுகிறது. அவருக்கு உங்களுடைய உத்தமம் தேவையாயிருக்கிறது. ஆனால் அவர் இன்றிரவு பார்த்துக்கொண்டிருக்கிறார். நீங்கள் எவ்வளவுதான் பாவம் செய்திருந்தாலும், அது எவ்வளவு சிறியதாயிருந்தாலும் அல்லது எவ்வளவு பெரியதாய் இருந்தாலும், நீங்கள் இன்னமும் பாவியாகவே இருக்கிறீர்கள், எனவே எல்லாவற்றுக்கும் போதுமான தேவனுடைய பலியாகிய, இயேசு கிறிஸ்துவினாலேயன்றி வேறெந்த வழியிலும் உள்ளே பிரவேசிக்க முடியாது. அவருக்குள்ளாக நீங்கள் என்றென்றுமாய் பரிபூரணப்பட்டிருக்கிறீர்கள். அதை குறித்து சிந்தியுங்கள்! இது நீங்கள் செய்கிற எந்தக் காரியத்தினாலும் அல்ல. இது நீங்கள் புதிய பக்கங்களை திருப்புகிறதினால் அல்ல. இது நீங்கள் தொடங்குகிற ஒரு புதிய வாழ்க்கையினால் அல்ல. இது உங்களுடைய தவறுகளைக் குறித்த ஒரு அறிக்கையாயும் மற்றும் உங்களுக்கான தேவனுடைய கிருபையாயுமுள்ளது. அதுவே உங்களை பரிபூரணத்திற்கு கொண்டு வருகிறது, அப்பொழுதே நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் பரிபூரணப்பட்டிருக்கிறீர்கள். 78 என் நண்பனே, இன்றிரவு, நாம் இங்கே இந்த மகத்தான முக்கிய தருணத்தில் இப்பொழுது இருக்கையில், இந்த சம்பவத்தை கேட்ட பிறகு, தீர்மானங்கள் செய்யப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் இதை இதற்கு முன்னர் ஒருபோதும் கேட்காமலிருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் அந்த வாசல்களில் ஒன்றில் உள்ளே வந்த அதே நபராக நீங்கள் வெளியே செல்ல முடியாது, நீங்கள் மேலானவர்களாக அல்லது மோசமானவர்களாக செல்ல வேண்டும். 79 நம்முடைய தலைகளை நாம் வணங்கியிருக்கும் இந்த நேரத்தில், நீங்கள் அதைக் குறித்து கடுமையாக சிந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்றிரவு உங்களுடைய ஆத்துமாவைக் குறித்து என்ன? இயேசு கிறிஸ்து உங்களுக்காக மரித்தாரே. 80 நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், நான் புகைப்பிடிப்பதை விட்டுவிட முடியும்போது, நான் குடிப்பதை விட்டுவிட முடியும்போது, நான் இந்தக் காரியத்தை சரிப்படுத்திக்கொள்ள முடியுமோ, நான் அதைச் செய்வேன்” என்று கூறலாம். ஓ, அது ஒருபோதும் சரியாக்கப்படாது. உன்னால் அதை ஒருபோதும் செய்யவே முடியாது. நீங்கள் ஏன் இருக்கிற வண்ணமாகவே வரக்கூடாது? விசுவாசத்தினாலே, அந்த ஊற்றண்டைக்குச் செல்லுங்கள், அங்கேதான் உம்முடைய காயங்களிலிருந்து பாய்ந்தளிக்கிறது, அப்போது மீட்பின் அன்பே உங்களுடைய கருப்பொருளாயிருக்கும், நீங்கள் மரிக்கும் வரை அது இருக்கும். 81 நீங்கள் ஏன் வேறொன்றை எடுக்க வேண்டும்? நீங்கள் ஏன் உங்களுடைய சபையின் மூலம் உள்ளே வர முயற்சிக்க வேண்டும்? நீங்கள் குடிப்பதை அல்லது பொய்யுரைப்பதை விட்டு விடுவதனால் ஏன் உள்ளே வர முயற்சிக்க வேண்டும்? பரிபூரணத்தின் வழியாகவே வாருங்கள்! “ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தயிருக்கிறார்.” “நான் எப்படி பரிசுத்தமாக்கப்படுவது?” 82 உங்களுடைய பாவங்களை இயேசுவின் இரத்தத்தின் பிரசன்னத்திலே அறிக்கையிடுங்கள்; அப்பொழுது அந்த இரத்தத்திலிருந்து வருகிற ஜீவன் ஆராதனை செய்கிறவனிடத்திற்கு திரும்பி வந்து, உலகக் காரியங்களின் வாஞ்சைகளிலிருந்து அவனை பரிசுத்தப்படுத்துகிறது. ஏனெனில், எல்லாவற்றிற்கும் போதுமான அந்த பலியினாலே, அவர் நம்மை பரிசுத்தப்படுத்தியிருக்கிறார்; நாம் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.” நீங்கள் ஆவியின்படி நடக்க முயற்சித்துக்கொண்டு, இன்னுமாக மாம்ச இச்சையுடையவர்களாயிருந்தால், அந்த பலியானது போதுமானதாக உங்களுக்குப் பயனபடுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஆராதனை செய்கிறவன் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, அவனுக்கு அதற்குமேல் பாவத்தின் வாஞ்சையேயிராது. 83 அதுவே கல்வாரியாயிருந்தது. அது மலர்களை விற்கிறதான ஒரு இடம் அல்ல, அல்லது இதை அல்லது அதை செய்யக் கூடிய ஒரு சிறிய இடம் அல்ல. அது தேவனும் மனிதனும் ஒப்புரவாக்கப்பட்ட ஒரு இடமாயிருந்தது. அதுதானே சமாதானமும் முழுமையான பாதுகாப்பும் மனுக்குலத்திற்கு கொண்டு வரப்பட்ட இடமாயிருந்தது. பாவியாகிய என் நண்பனே, இன்றிரவு நீ விசுவாசத்தினாலே இந்த இரத்தத்தை உன்னுடைய சொந்த ஆத்துமாவிற்கு பயன்படுத்தி, பரிசுத்த ஆவியானவர் வந்து தம்முடைய மகத்தான பலியினால் உன்னை பரிசுத்தப்படுத்த அனுமதிக்கும்படி என்னோடு கல்வாரிக்கு வரமுடியுமா? 84 நாம் ஜெபிப்பதற்கு முன்பாக, நீங்கள் உங்களுடைய கரத்தை தேவனிடம் உயர்த்தி, “தேவனே, என்னிடம் இரக்கமாயிரும். நான் இப்பொழுது என்னுடைய எல்லா பாவங்களையும், இந்த பெரிய வெள்ளிக்கிழமை இரவிலே அறிக்கையிடுகிறேன். கிறிஸ்து எனக்காக பட்ட பெரும் துன்பத்தை நான் மெச்சிக்கொள்கிறேன். நான் இப்பொழுது என்னுடைய சொந்த விருப்பத்தை, என்னுடைய சொந்த நோக்கங்களையும் மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் இது முதற்கொண்டு, இந்நாளிலிருந்து உம்மை பின்பற்றும்படி ஒப்புவிக்கிறேன்” என்று சொல்வீர்களாக. உங்களுடைய கரத்தை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாம், ஜெபத்திலே என்னை நினைவுகூரும். அதுவே என்னுடைய இருதயத்தின் தீர்மானம்” என்று கூறுவீர்களா? இந்த மகத்தான இரவிலே, நாங்கள் சற்று நேரம் காத்திருக்கையில், இன்னும் யாராவது இருக்கிறீர்களா? இங்கே என்னுடைய வலப்பக்கத்தில், நிச்சயமாகவே அங்கே ஒருவர் இருக்கிறார். நீங்கள் உங்களுடைய பாவங்களை குறித்து வெட்கப்படுகிறீர்களா? நீங்கள் செய்துள்ளதைக் குறித்து நீங்கள் வெட்கப்படுகிறீர்களா? 85 இன்றிரவு இந்த உலகம் வீரர்களை தேடிக்கொண்டிருக்கிறது. அது வீரர்களை உடையதாயிருக்கிறது, மாம்சபிரகாரமாகப் பேசுகிறேன். 86 ஒரு நாள் அதோ தொலைவில் உள்ள சுவிட்சர்லாந்தில், சுவிஸ் சுவிட்சர்லாந்து ஆபத்தில் இருந்தபோது, அவர்களுடைய பொருளாதாரத்தைப் பாதுகாக்க—பாதுகாக்க அந்த சிறிய சுவிஸ் கூட்டத்தினர் களத்திலே ஒன்று கூடியிருந்தனர். அவர்களை எதிர்த்து வரவிருவிருந்த இராணுவமோ மிகப் பெரியதாயிருந்தது; அவர்கள் எல்லோரும் பயிற்றுவிக்கப்பட்டு, பெரிய ஈட்டிகளையும் கேடகங்களையும் வைத்திருந்தனர். சுவிஸ் மக்கள் அந்த முயற்சியை கைவிடுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாததாயிருந்தது. அவர்களுக்கு எதிரே இருந்த ஒரு மலைதான் ஆதரவாக இருந்தது. அப்பொழுது அங்கிருந்த ஒரு வீரன் முன்வந்தான். யாரோ ஒருவர் மரிக்க வேண்டியதாயிருந்து. அவர்கள் மாத்திரம் அந்த யுத்தத்தில் தோற்றுப்போனால்… 87 அவர்களிடம் போரிடுவதற்கு பழைய அரிவாள்களும், கற்களும், தடிகளுமேயன்றி வேறொன்றுமில்லாதிருந்தன. எதிர்கொண்டு வந்த இராணுவ சேனையோ ஒரு செங்கல் சுவரைப் போலக் காணப்பட்டது. அவர்கள் சிறைபிடிக்கப்படுவிட்டால், அவர்களுடைய அழகான இளம் மனைவிகள் கற்பழிக்கப்படுவார்கள், அவர்களுடைய வாலிப் பெண்களும் கற்பழிக்கப்படுவார்கள், அவர்களுடைய குழந்தைகள் கொல்லப்படுவார்கள், அவர்களுடைய தலைகள் உடைக்கப்படும், அவர்களின் வீடுகள் பறிபோய்விடும், ஒவ்வொரு காரியமும் இழக்கப்படும். 88 அப்பொழுது ஒரு மனிதன் அங்கிருந்தான், அவனுடைய பெயர் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கப்பட்டுவிட்டது, ஆர்னால்ட் ஃபான் விங்கல்ரீட் என்ற பெயருடையவன். அவன் முன்வந்து, “சுவிட்சர்லாந்தின் மனிதரே, இந் நாளிலே சுவிட்சர்லாந்திற்காக நான் என்னுடைய ஜீவனைத் தருகிறேன்” என்றான். மேலும் அவன், “அதோ அப்பாலுள்ள அந்த மலைக்கு அப்புறத்தில் ஒரு சிறிய வெள்ளை வீடு இருக்கிறது. அங்கே எனக்காக காத்துக்கொண்டிருக்கிற ஒரு மனைவியும், மூன்று பிள்ளைகளும் எனக்கு உண்டு. ஆனால் அவர்கள் இனி என்னை ஒருபோதும் பார்க்கப்போவதில்லை, ஏனென்றால், இந்நாளிலே சுவிட்சர்லாந்திற்காக என்னுடைய ஜீவனைக் கொடுக்கப்போகிறேன்” என்றான், அப்போது அவர்கள், “ஆர்னால்ட் ஃபான் விங்கல்ரீட், நீ என்ன செய்ய உள்ளாய்?” என்று கேட்டனர். 89 அதற்கு அவன், “என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள், உங்களிடம் இருக்கிறதைக் கொண்டு, உங்களால் இயன்ற மட்டும் முடிந்ததைச் செய்யுங்கள்” என்றான். 90 அவன் அந்த கனமான ஈட்டிகளைப் கண்டறியும் வரையில் அந்த இராணுவத்தையே நோக்கிப் பார்த்தான். அதன்பின்னர் அவன் தன்னுடைய கரங்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தினவாறு, அந்த பெரிய செங்கல் மதில்போல் இருந்த ஈட்டிகளை நோக்கியவாறு கூச்சலிட்டுக் கொண்டே ஓடி, “விடுதலைக்கான வழியை உண்டாக்குவோம்! விடுதலைக்கான வழியை உண்டாக்குவோம்!” என்றான். அவனுடைய திடீர் தாக்குதலில் அவனைப் பிடிக்க நூறு ஈட்டிகள் எறியப்பப்பட்டன; அப்போது அவன் தன் கைகளை விரித்து, அவை அனைத்தையும் தன் மார்போடு சேர்த்து பிடித்துக்கொள்ள, அவைகளினால் குத்தப்பட்டு, அந்த ஈட்டிகளின் முனையிலே அவன் மரித்துப் போனான். அந்த சுவிஸ் ஜனங்கள் தடிகளோடும் கம்புகளோடும் அவனைப் பின்தொடரந்தனர். அந்த மாபெரும் வீரக் காட்சியினாலே அந்த சுவிஸ் கூட்டம் இராணுவத்தை தோற்கடித்து அவர்களை தேசத்தை விட்டு அடித்து துரத்தினது. அன்றைய தினத்திலிருந்து இன்றுவரை ஒருபோதும் ஒரு போரும் அவர்களுக்கு ஏற்படவில்லை. 91 சுவிட்சர்லாந்திலே எழம்பி நின்று, ஆர்னால்ட் ஃபான் விங்கல்ரீட்டின் பெயரைக் கூறும்போது, அவர்களுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுவதை நீங்கள் காண்பீர்கள். ஏன்? அவன் அவர்களுடைய நாட்டைக் காப்பாற்றினான். அது ஒரு மகத்தான வீரச் செயலாயிருந்து. இந்த பூமியில், இதைவிட மேலானது என்று எதுவுமே, இதனோடு ஒப்பிடப்படுகிறதில்லை. 92 ஆனால், ஓ, இதுவோ ஒரு நாள் சம்பவித்திருந்ததோடு பார்த்தால் சிறிய காரியமாயிருந்தே! ஆதாமின் வம்சம் எதிர்த்து நின்றபோது, ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் பிசாசுகள் அணிவகுத்து வந்தன, தீர்க்கதரிசிகள் தவறிப்போயிருந்தனர், நியாய பிரமாணம் தவறிப்போயிருந்தது, காளைகள் மற்றும் செம்மறியாடுகளின் பலிகள் தவறிப்போயிருந்தன, மனிதனின் ஜென்ம சுபாவமும், ஒவ்வொரு காரியமும் தவறிப்போயிருந்தது. ஆதாமின் சிறிய வர்க்கமானது எதிர்த்து நின்றபோது, பிசாசுகளினாலும், மூட நம்பிக்கைகளினாலும், சுகவீனத்தினாலும், வியாதினாலும் எண்ணிக்கைக்கடங்காதோர் தோற்கடிக்கப்பட்டனர். அப்பொழுது பரலோகத்திலிருந்து ஒருவர் வெளியே அடியெடுத்து வைத்து, “இந்நாளில் நான் ஆதாமின் வம்சத்திற்காக மரிப்பேன்” என்றார். அவர் பூமிக்கு வந்து மாம்சமானார். அவர் ஈட்டிகளின் மத்தியில் அந்தகாரமாயிருந்த இடத்தை கீழ் நோக்கிப் பார்த்தார். எல்லா மனிதனுடைய பயங்களிலும் மிகவும் அந்தகாரமானது மரணமாயிருந்து, அவர் மரணத்தை தன்னுடைய மார்புக்குள் எடுத்துக்கொண்டார். அவர் கல்வாரியிலே பலியை கிரையமாகச் செலுத்தி, “விடுதலைக்கான ஒரு வழியை உண்டுபண்ணுகிறேன்!” என்று சத்தமிட்டார். 93 மேலும் அவர் தம்முடைய சபையை நோக்கி, “நான் உங்களுக்காக விட்டுச் சென்றுள்ள இந்த என்னுடைய இரத்தத்தையும் என்னுடைய ஆவியையும், மற்றும் நீங்கள் பெற்றுள்ளவற்றைக்கொண்டு போரிடுங்கள்” என்று சத்தமிடுகிறார். நண்பனே, இன்றிரவு நம்மால் அதன் மூலம் ஜெயங்கொள்ள முடியும். உங்களிடமிருந்து பிசாசை நீங்கள் துரத்த முடியும். உங்கள் ஜீவியத்திலிக்கிற ஒவ்வொரு பழைய சத்துருவையும், கிறிஸ்துவின் இரத்தத்தினாலும் ஆவியினாலும் துரத்தியடிக்க முடிந்து, நீங்கள் அவருடைய பிரசன்னத்திலே பரிபூரணமானவர்களாக நிற்க முடியும். கிறிஸ்து அந்த வழியை உண்டுபண்ணினாரே! 94 நீங்கள் உங்களுடைய கரத்தை அவரிடம் உயர்த்தி, “என்னை மன்னியும்” என்று கேட்க முடியுமா? சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்னும் வேறுயாராவது, “தேவனே, என்னிடம் இரக்கமாயிரும், நான் என்னுடைய தவறுகளை இப்பொழுது அறிக்கையிடுகிறேன்” என்று கூறுவீர்களா? 95 ஒவ்வொரு நாளும் சபைக்குச் செல்லுகிற வெதுவெதுப்பான சபை அங்கத்தினர்கள் யாரேனும், உங்களால் முடிந்தளவு பயபக்தியுள்ளவர்களாயிருக்க முயற்சித்தும், கோபமும், அலட்சியமும், சுயநலமும், மற்ற பழக்கங்களும் உங்களை ஒட்டிக்கொண்டு நீங்கள் வெற்றியடையக் கூடாதபடி செய்கிறது என்று சொல்லுகிறவர்கள் இருக்கிறீர்களா? அந்த எல்லாவற்றிலுமிருந்து, இன்றிரவு இரத்தத்தினாலே நீங்கள் சுத்திகரிக்கப்பட விரும்புகிறீர்களா? “ஆராதனை செய்கிறவர் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு,…உணர்த்தும் மனசாட்சி அவருக்கு இல்லாதிருப்பதினால்,” சபை அங்கத்தினராகிய நீ, உன்னுடைய கரத்தை நீ உயர்த்த விரும்புகிறாயா? பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய கரத்தை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாம், என்னை ஜெபத்தில் நினைவுகூருங்கள்” என்று சொல்லுங்கள். பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரிதான். அது ஒரு உண்மையான…அதுவே செய்யும்படியான ஒரு உண்மையான காரியமாயுள்ளது. ஐயா, அங்கே பின்னால் உள்ள உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. 96 இன்னும் யாராவது உங்களுடைய கரத்தை உயர்த்தி, “தேவனே, என்னிடம் இரக்கமாயிரும். நான் கிறிஸ்தவ மார்க்கத்தைக் குறித்து வெளிப்படையாகப் பேசுகிறேன், ஆனாலும் அதன்படி ஜீவிக்கிறதில்லை என்பதை நான் அறிவேன். நான் அதன்படி ஜீவிக்கிறதில்லை என்பதை நான் அறிவேன். என்னுடைய இருதயத்தில், நான் உம்மோடு உண்மையாகவே சரியாக இல்லை. நான் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன். என்னுடைய இருதயத்தில் நான் அவ்வாறிருக்க உணர்கிறேன், ஆனாலும் என்னை சுற்றி நெருங்கி நிற்கிற பாரங்களை நான் ஒருபோதும் தள்ளிவிட்டதில்லை. நான் இன்றிரவு அவைகளை ஒருபுறம் தள்ளிவைக்க விரும்புகிறேன். மேலும், தேவனுடைய கிருபையினாலே, நான் அதைச் செய்வேன். எனக்காக ஜெபியுங்கள்.” நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறுயாராவது. இன்னும் சற்று நேரம், நாங்கள் காத்துக் கொண்டிருக்கப் போகிறோம். 97 நாம் அமைதியாய் காத்துக் கொண்டிருக்கையில், ஒவ்வொருவரும் இப்பொழுது உங்களுடைய தலைகளை ஜெபத்தில் வணங்கியிருப்பதோடு, மென்மையாய் இதை வாய்த்திறவாமல் பாடுங்கள். இரத்தத்தினால் உண்டான ஊற்று ஒன்று உண்டு, அது இம்மானுவேலின் நரம்பிலிருந்து எடுக்கப்பட்டது, பாவிகள் அதனடியில் மூழ்கி… தங்களுடைய பாவக் கறைகளைப் போக்குகின்றனர், போக்குகின்றனர்… 98 நீங்கள் அதை சற்று மேலாக சிந்தித்துப் பார்க்கமாட்டீர்களா? அதைக் கழுவிட முயற்சிக்க வேண்டாம். கிறிஸ்து உங்களுடைய கரத்தில் இருக்கிறார். 99 பிலாத்து இவ்விதமான காலை வேளையிலே, சுமார் ஆறு மணியளவில் அதைச் செய்தான்; ஆனால் அவனுடைய கரங்கள் இன்னமும் இரத்தக் கறையோடு, குற்றமுள்ள இரத்தக் கறையோடுள்ளது. அவனுக்கு என்ன நேர்ந்தது என்று உங்களுக்குத் தெரியும். அநேக ஆண்டுகளுக்குப் பிறகு, அவன் சுவிட்சர்லாந்துக்குச் சென்று தன்னுடைய சிந்தையை இழந்து, குளத்திலே மூழ்கி மரித்துப் போனான். இன்று காலையில், சுவிட்சர்லாந்தில், நூற்றுக்கணக்கானோர் அந்தக் காட்சியை காண வருகின்றனர், அதாவது அந்த குளத்தின் அடியிலிருந்து பெரிய ஓட்டை வழியாக நீல நிறத் தண்ணீர் கொப்பளித்து மேலே எழும்புகிறது. அவர்கள் ஒவ்வொரு வருடமும் அதைக் காண வருகின்றனர். தேவன் அவனுடைய கரங்களை சுத்தப்படுத்த தண்ணீர் தர மறுத்துவிட்டார் என்று அவர்கள் கூறுகிற ஒரு பழம்பெருங் கதையாய் அது உள்ளது. 100 சகோதரனே, நீ எத்தனை முறை ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் என்ன செய்ய முயற்சித்தாலும், கிறிஸ்துவின் இரத்தத்தைத் தவிர வேறு எதுவுமே உங்களுடைய கரங்களை சுத்தம் செய்யாது. தேவன் அதை மறுத்துவிட்டார். அந்த நீலநிறத் தண்ணீர், ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னமும் கொதிக்கிறது. தேவன் அதை மறுக்கிறார். உங்களுடைய சுய நீதி உங்களுடைய பாவங்களை சுத்திகரிக்க முடியாது. இயேசுவின் இரத்ததமேயன்றி வேறு எதுவும் சுத்திகரிக்காதே! அதைக் குறித்து இப்பொழுது சிந்தியுங்கள். நாம் சற்று நேரத்தில், ஜெபிக்கப்போகிறோம். 101 நான் இன்றிரவு ஒன்றைக் கேட்க முடியுமா என்று எதிர்பார்க்கிறேன். அவர் அங்கே பிலாத்துவின் நியாயத்தீர்ப்பின் மண்டபத்திலே நின்று, இதைப்போன்ற காலையில், “என்னுடைய இராஜ்ஜியம் இந்த உலகத்திற்குரியதாயிருந்தால், நான் என்னுடைய பிதாவினிடத்தில் பேச, அவர் உடனடியாக பன்னிரெண்டு லேகியோன் தூதர்களை எனக்காக அனுப்புவார்” என்றார். அப்போது அவர்களில் ஒருவரால் இந்த உலகத்தை அழித்து விட முடியும். “நான் அவரிடத்தில் பேசினால், உடனடியாக பன்னிரெண்டு லேகியோன் தூதர்கள் என்னுடைய கட்டளைக்கு கீழ் இருப்பார்கள்.” அதை அவரால் செய்திருக்க முடியும். ஆனால் அவரோ உங்களுடைய மரணத்தையும் உங்களுடைய பாவத்தையும் ஏற்றுக்கொள்வதற்கு சாந்தமும் தாழ்மையுமாய் அங்கு நின்றார். 102 இன்றிரவு அந்த பலிக்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாயிருப்பீர்களா, அதைக் குறித்த தேவையுள்ளவர்களாகிய நீங்கள், தேவனுடைய ஆசீர்வாதங்களின் தேவையுள்ளவர்கள், இந்த ஜெபத்திற்காக நீங்கள் எழும்பி நிற்பீர்களா? இந்த ஜெபத்தில் நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள், சற்று எழும்பி நின்று, “தேவனே, என்னிடம் இரக்கமாயிரும். நான் குற்றமுள்ளவனாய் இருக்கிறேன். நான் தவறான காரியங்களைச் செய்திருக்கிறேன், நான் இப்பொழுதே கிறிஸ்து இயேசுவின் மூலமாய் என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று கூறுங்கள். நீங்கள் இந்த நேரத்திலே எழும்பி நிற்பீர்களா? வாலிபப் பெண்மணியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அதுதான் தைரியம். அப்படியே அங்கு நின்றவண்ணமாயிருங்கள். 103 நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தியும், பின்னர் நீங்கள் எழும்பி நிற்க போதிய உத்தமமில்லாதவராய் இருக்கிறீர்கள் என்று நீங்கள் என்னிடம் பொருட்படுத்திக் கூறுகிறீர்களா? இந்த சுவிசேஷம் உங்களுக்கு எப்பொழுதாவது ஏதேனும் நன்மை செய்திருக்கிறதா? ஓ, சபையோடு அப்படி விளையாடுவது, தேவனோடு அப்படி விளையாடுவது! வேளையாவது சமீபித்துவிட்டது, இந்நாட்களில் ஒன்றில் இங்கு எங்கோ ஒரு அணுகுண்டு சுற்றிலும், இந்த பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றில் தாக்கும். அப்போது அதைப் பற்றி சிந்திக்க ஒரு நொடிக்கு குறைவான நேரம் கூட இருக்காது. அப்பொழுது மிகவும் காலதாமதமாகிவிட்டிருக்கும், அது அடுத்த ஈஸ்டருக்கு முன்பாகவோ, அல்லது இந்த ஈஸ்டரிலே கூட இருக்கலாம். நீ இப்பொழுதே எழும்பி நின்று, “தேவனே, ஒரு பாவியாகிய, என்னிடம் இரக்கமாயிரும். என்னுடைய பாவங்களை நிவிரத்தி செய்கிற ஒரு கிருபாதாரபலியாக தம்மையே பலியாக்கினதன் மூலம், நான் இப்பொழுதே கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறேன். அவருடைய கிருபையினாலே, அவருடைய கிருபையினாலே மாத்திரமே, நான் தேவனுடைய பிரசன்னத்தில் தரித்திருக்கிறேன்” என்று கூறமாட்டீர்களா. நீங்கள் உங்களுடைய தவறுகளை அறிக்கையிடுவீர்களா? தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். தன் பாவங்களை அறிக்கையிடுகிறவனோ இரக்கம் பெறுவான். அது உங்களைப் பொறுத்ததாயுள்ளது. அவர் கவனித்துக்கொண்டிருக்கிறார். 104 இப்பொழுது, எங்களுடைய ஸ்தோத்திரிக்கப்பட்ட கர்த்தாவே, இன்றிரவு ஒரு குறிப்பிடத்தக்க எண்ணாக மூன்று மனம் வருந்துகிற ஆத்துமாக்கள், ஒரு மனிதனும் இரண்டு ஸ்திரீகளுமாக நிற்கின்றனர். 105 கர்த்தாவே, நான் கல்வாரியைக் குறித்து சிந்துக்கொண்டிருக்கையில், ஒரு பக்கத்தில் ஒருவன், “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்ஜியத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்றான்; மற்றொருவனோ, “நீர் அவர் தானென்றால், நாங்கள் ஒரு அற்புதத்தை காணட்டும், எங்களை சிலுவையிலிருந்து இறக்கி, உம்மையும் இரட்சித்துக் கொள்ளும்” என்றான். இன்னொருவனோ, “தேவனே, என்னிடத்தில் இரக்கமாயிரும்” என்றான். உம்முடைய தலை வலது பக்கமாக சுற்றித் திரும்ப, “இன்றைக்கு நீ என்னோடுகூடப் பரதீசியிலிருப்பாய்” என்றீர். ஆனால் மற்றொருவனிடமோ எந்த ஒரு மனந்திரும்புதலும் இல்லாததினால், நீர் மௌனமாய் இருந்தீர். 106 பிதாவாகிய தேவனே, நான் ஜெபிக்கிறேன், ஒருக்கால் இந்த…மூன்று பேர் மாத்திரமே இந்த கட்டிடத்தில், தங்களுடைய தவறுகளை அறிக்கையிட வேண்டும் என்று அவர்கள் உணருகிறார்கள் என்றே நான் நம்புகிறேன். ஆனால் அவர்களோ எல்லாவற்றிற்கும் போதுமான வழிக்கு, சிலுவையின் வழிக்கு வந்துள்ளனர். கர்த்தாவே, அவர்களை மன்னித்து, அவர்களை ஆசீர்வதியும். அவர்கள் இன்றிரவு இங்கு நின்றுகொண்டிருக்கிறார்கள்; நீர் அவர்களுக்காக, பிலாத்துவின் நியாயத்தீர்ப்பு மண்டபத்திலே நின்றது போன்றே; சூரியன் அஸ்தமித்து சந்திரனும் தன்னுடைய ஒளியைத் தர மறுத்தபோது, நீர் அவர்களுக்காக வானங்களுக்கும் பூமிக்குமிடையே நின்றது போன்றே, அப்பொழுது தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கி கீழ்வரைக்கும் கிழிக்கப்பட்டது. தேவனே, நீர் அவர்களை ஆசீர்வதித்து, உம்முடைய இரக்கங்களை அவர்களுக்கு அளித்து, உம்முடைய இரத்தத்தினாலே அவர்களை சுத்திகரிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். உம்முடைய பரிசுத்தமாக்கும் வல்லமையினாலே, அவர்கள் உம்முடைய சொந்த குமாரனாகிய, கிறிஸ்து இயேசுவின் சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுவார்களாக. அப்பொழுது அவர்கள் காலத்திற்கும் நித்தியத்திற்குமாய் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள். தாங்கள் ஏற்கனவே இதனை சந்தித்து, அவ்வண்ணமாய் செய்து, சரியான நிலையில் இருக்கிறோம் என்று உணர்கிற மற்றவர்களையும் ஆசீர்வதியும். நான் கிறிஸ்துவின் நாமத்தில், அவர்களுக்கான இந்த ஆசிர்வாதங்களுக்காக ஜெபிக்கிறேன். ஆமென். 107 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எழும்பி நின்றவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறவர்கள், கரம் நீட்டி அவர்களுடைய கரங்களை குலுக்கி, யாருடனாவது, ஐக்கியத்தின் ஆதரவாக, “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று கூறுங்கள், அது சரியே. 108 நாம் இப்பொழுது நம்முடைய ஆராதனைகளில் சற்று தாமதமாக உள்ளோம். எத்தனை பேர் கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறீர்கள், உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? இப்பொழுது மௌனமாக அல்லது சர்வ வியாபியானவரின் ஞாபகார்த்தமாக, நம்மால் முடிந்தளவு அமைதியாக, இன்றிரவு இங்குள்ள அவரைக் குறித்து, நம்மால் மெதுவாக பாடமுடியுமா என்று எதிர்பார்க்கிறேன். அந்த சிலுவையிலே என்னுடைய இரட்சகர் மரித்தார், பாவத்திலிருந்து சுத்திகரிக்க நான் அங்கே கதறினேன்; அங்கே என்னுடைய இருதயத்திலே (நீங்கள் தேவையை பூர்த்தி செய்தபோது, உங்களுடைய கரங்களை அதின்மேல் வைத்தீர்கள்), அங்கே என்னுடைய இருதயத்திற்கு இரத்தம் பூசப்பட்டது; ஓ, அவருடைய நாமத்திற்கே மகிமை! நாம் நம்முடைய தலைகளை அவருக்கு தாழ்த்தியிருக்கையில், நாம் இப்பொழுது மெல்லப் பாடுவோமாக. அந்த சிலுவையிலே என்னுடைய இரட்சகர் மரித்தார், பாவத்திலிருந்து சுத்திகரிக்க நான் அங்கே கதறினேன்; அங்கே என்னுடைய இருதயத்திற்கு இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமை! அவருடைய நாமத்திற்கே, விலையேற்றப் பெற்ற நாமத்திற்கே மகிமை! அவருடைய விலையேற்றப் பெற்ற நாமத்திற்கே மகிமை! அங்கே என்னுடைய இருதயத்திற்கு இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமை! 109 இப்பொழுது அமைதியாக, உங்களுடைய தலைகள் வணங்கியிருப்பதோடு. இரட்சிக்கப்பட்டிருக்கிற நீங்கள், “ஓ…” என்று கூறுங்கள். இப்பொழுது உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். ஓ, பாவத்திலிருந்து இரட்சிக்கிற விலையேறப்பெற்ற ஊற்றே! நான் அதற்குள் நுழைந்துள்ளதற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன்; அங்கேதான் இயேசு என்னை இரட்சித்து, சுத்தமாய் வைத்துக் கொள்கிறார்; அவருடைய நாமத்திற்கே மகிமை! அவருடைய விலையேறப்பெற்ற நாமத்திற்கே மகிமை! அவருடைய விலையேறப்பெற்ற நாமத்திற்கே மகிமை! அங்கேதான் என்னுடைய இருதயத்திற்கு இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமை! 110 இப்பொழுது உங்களுடைய கரங்கள் கீழே இறங்கியிருப்பதோடு, உங்களுடைய தலைகள் வணங்கியிருக்கட்டும். நான் இப்போதுதான் யோசித்தேன்; யாரோ ஒருவர் ஒரு சில நிமிடங்களுக்கு முன் அழைத்து, அவர்களுடைய சரீரத்திற்காக, இன்றிரவு ஜெபத்தில் நினைவு கூரப்பட வேண்டும் என்று விரும்பினார் என்று கூறினார். அவர்களால் ஞாயிற்றுக்கிழமை இரவில் நடக்கும் மகத்தான சுகமளிக்கும் ஆராதனைக்கு, அந்த கூட்டத்திற்கு திரும்பிவர முடியாதாம். இப்பொழுதே அந்த ஜெபத்தில் நினைவு கூரப்பட வேண்டும் என்று விரும்புகிற நீங்கள், நீங்கள் எழுந்து நிற்பீர்களா? …என்னுடைய இருதயத்திற்கு இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமை! …மகிமை 111 இப்பொழுது உங்களுடைய தலைகளைத் தாழ்த்தியிருங்கள். “உங்களுடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, உங்களுடைய அக்கிரமத்தினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், உங்களுக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமானீர்கள்.” அவருடைய நாமத்திற்கே மகிமை! 112 இப்பொழுது, ஸ்தோத்தரிக்கப்பட்ட பிதாவே, நாங்கள் தாழ்மையாய் அந்த சிலுவையை அணுகுகையில், அங்கேதானே கிருபையும் இரக்கமும் என்னை கண்டுபிடித்தது, அங்கேதானே பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம் தன்னுடைய வெளிச்சத்தை என்னைச் சுற்றிலும் பிரகாசிக்க செய்தது. இந்த வியாதியஸ்தர்கள் உம்முடைய பிரசன்னத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது விசுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள், அந்த விசுவாசத்தின் மூலமே, அதோ அவ்விடத்திலே, அந்த வாரினால் அடிக்கப்பட்ட முதுகினை நோக்கிப் பார்க்கிறார்கள். “அவருடைய தழும்புகளால் குணமானோம்.” மகா பரிசுத்த பிதாவே, நாங்கள் எங்கள் விசுவாசத்தை அறிக்கையிட, நீர் எங்களுடைய சுகவீனமான சரீரங்களை கர்த்தராகிய இயேசுவின் பெரும் பாடுகளினூடாக சுகப்படுத்துகிறீர் என்றே விசுவாசித்து வருகிறோம். நீர் பிணியாளிகளை இரட்சிப்பீர் என்று வாக்களித்தபடியால், ஒரு விசுவாச ஜெபத்தை, நின்று கொண்டிருக்கிற இந்த ஜனங்களுக்காக நாங்கள் ஏறெடுக்கிறோம். இன்றிரவு நாங்கள் உம்முடைய விசுவாசிகளின் ஒரு குழுவாக ஒன்று சேர்ந்துள்ளோம். நீர், “இரண்டு பேராவது மூன்று பேராவது எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருப்பேன்” என்றீர். நாங்கள் அவர்களுக்கான இரக்கத்திற்காகவும், அதாவது உம்முடைய கிருபையானது இப்பொழுது அவர்களுடைய உள்ளான ஆத்துமாவைத் தொட்டு, ஏதோக்காரியம் ஆழமாய் நங்கூரமிட்டு; கிறிஸ்து இங்கு இருக்கிறார் என்றும், அவர்களிடத்தில் பேசியிருக்கிறார் என்றும், அதாவது, “என்னுடைய பிள்ளையே, நான் உன்னுடைய வியாதியை கல்வாரியிலே எற்றுக்கொண்டேன். இப்பொழுது உங்கள் கவலைகளை எல்லாம் என் மீது வைத்துவிடுங்கள், நான் உங்களை விசாரிக்கிறேன்” என்று கூறுவதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் முழுமையாக சுகமடைவார்களாக, ஏனென்றால் நாங்கள் இதை இயேசுவின் நாமத்திலே வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 113 அவர்கள் இப்பொழுது அமரும்போது, அவர்கள் அருகிலுள்ள யாருக்காவது, அவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்த, அவர்கள் மேல் உங்கள் கரத்தை வையுங்கள். வேதம், “அவர்கள் வியாதியஸ்தர் மேல் தங்களுடைய கரத்தை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று உரைத்துள்ளது. கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. 114 நான் தவறாக புரிந்து கொள்ளவில்லையென்றால், இங்கே இரண்டு நாட்களுக்கு முன்பாக அல்லது இரண்டு ஞாயிறுகளுக்கு முன்பு, செவிடாய் அல்லது காதுகளில் ஏதோ கோளாறோடிருந்து சுகமாக்கப்பட்ட அந்த மனிதனையா நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்? நீர் இன்றிரவு கூட்டத்தில் களிகூருகிறதை நான் பார்க்கிறேன். இப்பொழுது நான் பேசுவதை நீங்கள் சரியாக கேட்கிறீர்களா? அது நல்லது. அற்புதமாயிற்றே! நீங்கள் ஒரு விநாடி சற்று எழுந்து நில்லுங்கள். அவர் இங்கிருந்தது எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? அவர் ஜெப வரிசையினூடாக கடந்து சென்று, மீண்டும் அவர் மேடைக்கு கொண்டுவரப்பட, கர்த்தர் அவரைக் குணப்படுத்தி, அவரை சுமாக்கிவிட்டார். கர்த்தருக்கே ஸ்தோத்திரமுண்டாவதாக! சகோதரனே, உங்களுடைய சாட்சிக்காக, உங்களுக்கு நன்றி. அது டஜன் கணக்கானோராய் இருக்கக் கூடுமே! ஆனால் அவர் அற்புதமானவரல்லவா? 115 இப்பொழுது, நாளை இரவும் உங்களை நாங்கள் சீக்கிரமாகக் காண விரும்புகிறோம். பிறகு ஞாயிறு காலையிலும் சீக்கிரமாய் வாருங்கள். ஞாயிற்றுக் கிழமை மதியம், ஞாயிறு இரவு நடைபெறும் சுகமளிக்கும் ஆராதனைக்காக உங்களால் திரும்பவும் வர முடிந்தால் நலமாயிருக்கும். நாம் சந்திக்கும் வரை, நாம் எழும்பி நின்று, “இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல்” என்று நாம் கலைந்து செல்லும்போது பாடும் பாடலைப் பாடுவோமாக. இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல், துன்பமும் துயரமுமான பிள்ளையே; அது சந்தோஷத்தையும் ஆறுதலையும் தரும்…(இப்பொழுது திரும்பி ஒவ்வொருவருடனும் கரங்களைக் குலுக்குங்கள்.) அதை நீ எங்கு சென்றாலும் கொண்டு செல். விலையேறப்பெற்ற நாமம், (வலப்பக்கமாகத் திரும்பி கரங்களைக் குலுக்குங்கள்), ஓ,எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம்; விலையேறப்பெற்ற நாமம், விலையேறப்பெற்ற நாமம், ஓ, எவ்வளவு இனிமை! எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம். இப்பொழுது இந்த பக்கமாகப் பாருங்கள். இயேசுவின் நாமத்தில் வணங்கி, அவருடைய பாதத்தில் சாஷ்டாங்கமாய் விழுந்து, பரலோகத்தில் ராஜாதி ராஜாவுக்கு நாம் முடிசூட்டுவோம், நம்முடைய யாத்திரை முடிவுறும்போதே. விலையேறப்பெற்ற நாமம், ஓ, அது எவ்வளவு இனிமை! ஓ, எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம். விலையேறப்பெற்ற நாமம், ஓ, எவ்வளவு இனிமை! எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம். 116 இப்பொழுது நெவிலின் நால்வர் இசைப் பாடல் குழவினரின் நிகழ்ச்சி, காலையில் டபிள்யூ எல் ஆர் பி என்ற ஒலிப்பரப்பில், ஒன்பது மணிக்கு ஒலிப்பரப்பாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சகோதரன் ஸ்டிக்கரினுடையது ஞாயிறு காலை ஒன்பது நாற்பத்தைந்து மணிக்கு ஒளிப்பரப்பாகும். உயிர்தெழுதலின் பேரில், அவருக்காக இந்த பிற்பகல் வேளையில் ஒரு ஒலிநாடாவை பதிவுசெய்துகொண்டிருந்தோம். 117 இப்பொழுது, நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், நாம் மீண்டும் சந்திக்கும் வரை, கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் உங்களோடு இருப்பதாக. நான் ஜியார்ஜியாவிலுள்ள மாகானி லிருந்து வந்துள்ள என்னுடைய நல்ல நண்பரும் சகோதரனுமாகிய பால்மரை, நாம் ஜெபிக்கையில், அவர் இந்தக் கூட்டத்தாரை ஜெபம் செய்து அனுப்பி வைப்பாரா என கேட்டுக்கொள்ளப்போகிறேன். சகோதரன் பால்மர்.